Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மண்டல அளவிலான விளையாட்டு போட்டி மகளிர் பிரிவில் கள்ளக்குறிச்சி முதலிடம்

மண்டல அளவிலான விளையாட்டு போட்டி மகளிர் பிரிவில் கள்ளக்குறிச்சி முதலிடம்

மண்டல அளவிலான விளையாட்டு போட்டி மகளிர் பிரிவில் கள்ளக்குறிச்சி முதலிடம்

மண்டல அளவிலான விளையாட்டு போட்டி மகளிர் பிரிவில் கள்ளக்குறிச்சி முதலிடம்

ADDED : ஆக 09, 2011 02:45 AM


Google News

விழுப்புரம் : திருவள்ளுவர் பல்கலைக் கழகம் சார்பில் மண்டலங்களுக்கு இடையே நடந்த விளையாட்டு போட்டியில் கள்ளக்குறிச்சி மகளிர் கல்லூரி முதலிடம் பெற்றது.திருவள்ளுவர் பல்கலை கழகம் சார்பில் கடலூர்- விழுப்புரம் மண்டலங்களுக்கான விளையாட்டு போட்டி விழுப்புரம், லட்சுமிபுரம் சுவாமி விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.

போட்டியில் கடலூர் மண்டலத்திலிருந்து 20 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.மகளிருக்கான கோ-கோ விளையாட்டு போட்டியை கல்லூரி தலைவர் தியாகராஜன் துவக்கி வைத்தார். முதல்வர் கண்ணையா, செயலாளர் பரந்தாமன், பொருளாளர் தட்சணாமூர்த்தி, இணை செயலாளர் ஜெயவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மண்டல விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர் உட்பட 20 கல்லூரிகளை சேர்ந்த விளையாட்டு இயக்குநர்கள் மற்றும் 350 மாணவ, மாணவிகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.கோ-கோ போட்டியில் கள்ளக்குறிச்சி பாரதி மகளிர் கல்லூரி முதலிடத்தையும், கடலூர் கந்தசாமி மகளிர் கல்லூரி இரண்டாம் இடத்தையும் பிடித்தது. அதனை தொடர்ந்து ஆண்களுக்கான போட்டியில் கடலூர் ஜோசப் கல்லூரி முதலிடத்தையும், லட்சுமிபுரம் சுவாமி விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சுவாமி விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி தலைவர் தியாகராஜன் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us