/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/1,000 கி.,ரேஷன் அரிசி பறிமுதல் மூன்று பெண்கள் கைது1,000 கி.,ரேஷன் அரிசி பறிமுதல் மூன்று பெண்கள் கைது
1,000 கி.,ரேஷன் அரிசி பறிமுதல் மூன்று பெண்கள் கைது
1,000 கி.,ரேஷன் அரிசி பறிமுதல் மூன்று பெண்கள் கைது
1,000 கி.,ரேஷன் அரிசி பறிமுதல் மூன்று பெண்கள் கைது
ADDED : ஜூலை 19, 2011 09:31 PM
கோவை : கேரளாவுக்கு கடத்த இருந்த 1,000 கிலோ ரேஷன் அரிசி கோவை ரயில்வே ஸ்டேஷனில் பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் இருந்து கேரளாவுக்கு ரயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. புகார் தொடர்ந்ததையடுத்து, ரயில்வே போலீசார் நேற்று முன்தினம் முதல் கேரளா செல்லும் அனைத்து ரயில்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். ரயில்வே இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.50 மணிக்கு, நாகூர் - எர்ணாகுளம் வரை செல்லும், 'டீ கார்டன் எக்ஸ்பிரஸ்' ரயிலில் நடத்திய சோதனையில் 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, வடவள்ளியைச் சேர்ந்த ஜானகி(45) என்பவர் கைது செய்யப்பட்டார். நேற்று காலை இரண்டாவது பிளாட் பாரத்தில் போலீசார் ரோந்து சென்றபோது, கேரளா செல்லும் ரயிலில் கடத்த இருந்த 600 கிலோ அரிசி சிக்கியது.இந்த அரிசியை கேரளாவுக்கு கொண்டு செல்ல தயாராக இருந்த ஆலாந்துறையைச் சேர்ந்த ரங்கம்மாள்(50), சிங்காநல்லூரைச் சேர்ந்த சரஸ்வதி(50) கைது செய்யப்பட்டனர்.


