Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/லட்சம் நிதி

லட்சம் நிதி

லட்சம் நிதி

லட்சம் நிதி

ADDED : செப் 03, 2011 03:00 AM


Google News

மதுரை : மதுரை மாவட்டத்தில் மூங்கில் இயக்க திட்டத்திற்கு ரூ.

2.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை சார்பில் மூங்கில் இயக்கம் செயல்படுத்தி வருகிறது. இதன்கீழ் இந்த ஆண்டுக்கு மதுரை மாவட்டத்தில் மூங்கில் வளர்க்க ரூ. 2 லட்சத்து 58 ஆயிரம் நிதி பெறப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட யூனியனில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனரை சந்திக்கலாம். சிட்டா அடங்கல், சிறுகுறு விவசாயி சான்றிதழ், ரேஷன் கார்டு நகலுடன் விண்ணப்பித்து சீனியாரிட்டி பட்டியலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதுபற்றி விபரம் அறிய கிழக்கு யூனியனில் 98652 80167, மேற்கு யூனியனில் 98435 90001, திருப்பரங்குன்றம் 94438 55996, மேலூர் யூனியனில் 99439 32225, செல்லம்பட்டியில் 99947 31779, சேடப்பட்டியில் 98943 34001, டி.கல்லுப்பட்டியில் 98944 78994, வாடிப்பட்டியில் 93606 07452, அலங்காநல்லூர் 93809 30966, திருமங்கலத்தில் 94436 61682ல் தொடர்பு கொண்டு அறியலாம், என துணை

இயக்குனர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். கிழக்கு யூனியன் உதவி இயக்குனர் காமராஜ் கூறுகையில், ''மூங்கில் வளர்ப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு தலா ரூ. 4 ஆயிரம் வீதம் 8 ஆயிரம் வழங்கப்படும். ஒரு யூனியனில் 2 எக்டேர் வீதம் வளர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us