/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஊரணியில் சங்கமிக்கும் கழிவுநீர்; ஆண்டுகணக்கில் தொடரும் அவலம்ஊரணியில் சங்கமிக்கும் கழிவுநீர்; ஆண்டுகணக்கில் தொடரும் அவலம்
ஊரணியில் சங்கமிக்கும் கழிவுநீர்; ஆண்டுகணக்கில் தொடரும் அவலம்
ஊரணியில் சங்கமிக்கும் கழிவுநீர்; ஆண்டுகணக்கில் தொடரும் அவலம்
ஊரணியில் சங்கமிக்கும் கழிவுநீர்; ஆண்டுகணக்கில் தொடரும் அவலம்
ADDED : செப் 07, 2011 11:01 PM
வத்திராயிருப்பு எஸ்.
கொடிக்குளம் பேரூராட்சி 11வது வார்டில் யாதவர் மேலத்தெரு, ஊரணித்தெரு, மறவர் நடுத்தெரு, தைக்கா தெரு, வி.எஸ். சந்து உள்ளன. ஊரணித்தெருவின் முடிவில் உள்ள பொது ஊரணியில் வாறுகால் கழிவு நீர் சேர்வதால் 'செப்டிக் டேங்க்' ஆக மாறி வருகிறது. இதன் கொடுமை பல ஆண்டுகளாக தொடர்ந்தும் நடவடிக்கை இல்லை. இதன் விளைவாக, மனிதர்கள் மட்டுமன்றி, கால்நடைகளுக்கு கூட பயனின்றி, கொசு உற்பத்தி மையம், துர்நாற்றத்தின் பிறப்பிடமாக மாறி உள்ளது. நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டதால், அப்பகுதியினர் வீடுகளில் உள்ள போர்வெல் தண்ணீரைக்கூட பயன்படுத்த முடியாமல், வெளியிலிருந்து தண்ணீரை பிடிக்கின்றனர்.இது தொடர்பாக இப்பகுதி குடியிருப்போரின் குமுறல்கள் சில இதோ:அமுதா: வாறுகால்களை கட்டியவர்கள் கழிவுநீர் சேர்வதற்கு ஒர் இடத்தை தேர்வு செய்யாமல் விட்டதால், புறம்போக்கு நிலங்களில் தேக்கி இப்பகுதியை சுகாதாரக்கேடாக மாற்றி விட்டனர்.முத்துலட்சுமி: மழைக்காலத்தில் ஊரணியில் வீசும் துர்நாற்றத்தால் வீட்டில் இருக்க முடியவில்லை. சமைத்த உணவை சாப்பிட முடியவில்லை. மழைக்காலம் வந்தாலே வீட்டை பூட்டி, உறவினர் வீடுகளுக்கு சென்றுவிடுகிறேன்.வேலம்மாள்: ஊரணி சுற்றிலும் அடைந்து கிடக்கும் முட்புதர்களில், இல்லாத பாம்புவகைகளே இல்லை. பகலிலேயே பாம்புகள் வீடுதேடி வருகின்றன. குழந்தைகள் என அனைவரும் , உயிரை கையில் பிடித்தப்படி இரவை கழிக்கிறோம்.பரமசிவம்: ஊரணிமுழுவதும் கழிவுநீர் தேங்கி, இரவு, பகல் என வித்தியாசமே இல்லாமல் கொசுக்கடிக்கிறது. இதனால் இங்கு காலரா, வாந்திபேதிக்கு பஞ்சம் இல்லை. தோல்நோய்களாலும் அவதிப்படுகிறோம்.
நமது சிறப்பு நிருபர்


