மனைவி கண் முன் கணவன் கொலை: 5 லட்சம் கொள்ளை
மனைவி கண் முன் கணவன் கொலை: 5 லட்சம் கொள்ளை
மனைவி கண் முன் கணவன் கொலை: 5 லட்சம் கொள்ளை
ADDED : ஜூலை 27, 2011 03:47 AM
மதுரை: மதுரை அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து கணவனை கத்தியால் குத்தி மனைவியை கட்டிப்போட்டு ரூ.
5 லட்சம் கொள்ளயைடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ,நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் வேலு (45), மனைவி செல்வி(40) இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணியளவில் வேலு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வேலுவை கத்தியால் குத்திக்கொன்றனர். மனைவி செல்வியை கயிறால்கட்டிப்போட்டிவிட்டு, வீட்டிலிருந்த ரூ. 5 லட்சத்தினை கொள்ளையடித்து தப்பியோடிவிட்டனர். இது குறித்து உசிலம்பட்டி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தினை எஸ்.பி.யும் பார்வையிட்டார்.