Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/புதிய கட்டடத்தில் கூட்டம் நடத்த எதிர்ப்பு கவுன்சிலர்கள், அதிகாரிகள் புறக்கணிப்பு

புதிய கட்டடத்தில் கூட்டம் நடத்த எதிர்ப்பு கவுன்சிலர்கள், அதிகாரிகள் புறக்கணிப்பு

புதிய கட்டடத்தில் கூட்டம் நடத்த எதிர்ப்பு கவுன்சிலர்கள், அதிகாரிகள் புறக்கணிப்பு

புதிய கட்டடத்தில் கூட்டம் நடத்த எதிர்ப்பு கவுன்சிலர்கள், அதிகாரிகள் புறக்கணிப்பு

ADDED : செப் 10, 2011 03:14 AM


Google News

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் புதிய கட்டடத்தில் கூட்டம் நடத்துவதை கண்டித்து பெரும்பாலான கவுன்சிலர்கள் புறக்கணிப்பு செய்தனர்.நெல்லிக்குப்பம் நகரமன்ற வளாகத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை திறந்து அங்கு கூட்டம் நடத்த சேர்மன் கெய்க்வாட்பாபு முடிவு செய்தார்.இதற்கு அ.தி.மு.க., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., மனித நேய மக்கள் கட்சியினர் மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த அன்சாரி, பா.ம.க., முத்து ஆகியோர் புதிய கட்டடம் பணி முடியாத நிலையில் திறக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும் புதிய கட்டடத்தை சேர்மன் திறந்து வைத்து அங்கு கூட்டம் நடத்தினார்.ஆதரவு கவுன்சிலர்கள் மட்டும் திறப்பு விழா மற்றும் புதிய கட்டடத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.அதிகாரப்பூர்வாக திறப்பு விழா நடத்தாத கட்டடத்தில் கூட்டம் நடப்பதால் நாங்கள் பங்கேற்பது தவறு என கமிஷனர் குருசாமி உட்பட அதிகாரிகள் எவரும் பங்கேற்கவில்லை.மேலும், சேர்மன் வருகைப்பதிவேடு கேட்டபோது அங்கு கூட்டம் நடப்பது தவறு எனவே எந்த ஆவணமும் தர முடியாது என கமிஷனர் மறுத்து விட்டார். 12 கவுன்சிலர்கள் மட்டுமே இருந்ததால் ஒரு மணி நேரம் காத்திருந்து யாரும் வராததால் வேறு வழியின்றி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.பின்னர் பழைய கட்டடத்துக்கு வந்து கமிஷனரிடம் வருகைப் பதிவேடு தரும்படி சேர்மன் கேட்டார். புதிய கட்டடத்தில் நடந்த கூட்டத்தை ஏற்க முடியாது பழைய இடத்தில் கூட்டம் நடத்துங்கள் என கமிஷனர் கூறினார்.நீண்ட வாக்குவாதத்திற்குப் பின் பழைய கட்டடத்தில் உட்கார்ந்து கையெழுத்து போட்டனர்.ஓட்டுச்சாவடி பட்டியல் தீர்மானம் அவசரமானது அதை மட்டும் நிறைவேற்றுங்கள் என கமிஷனர் கேட்டுக் கொண்டார். 'அந்த தீர்மானம் மட்டும் நிறைவேறியதாக எழுதிக்கொள்ளுங்கள்' எனக் கூறிவிட்டு சேர்மன் மற்றும் அவரது ஆதரவு கவுன்சிலர்கள் சென்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us