/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தற்கொலையை தடுக்க சிறப்பு செயல் திட்டம் :மாவட்ட நிர்வாகம் முடிவுதற்கொலையை தடுக்க சிறப்பு செயல் திட்டம் :மாவட்ட நிர்வாகம் முடிவு
தற்கொலையை தடுக்க சிறப்பு செயல் திட்டம் :மாவட்ட நிர்வாகம் முடிவு
தற்கொலையை தடுக்க சிறப்பு செயல் திட்டம் :மாவட்ட நிர்வாகம் முடிவு
தற்கொலையை தடுக்க சிறப்பு செயல் திட்டம் :மாவட்ட நிர்வாகம் முடிவு
ADDED : செப் 08, 2011 02:16 AM
திருப்பூர் : வேலை வாய்ப்பின்மை மற்றும் வேலையிழப்பு மூலமாக நிகழும் தற்கொலை முயற்சிகளை தடுக்கும் வகையில், சிறப்பு செயல்திட்டம் வடிவமைக்கப்பட உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.கலெக்டர் மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கை:பல்வேறு காரணங்களால், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தற்கொலை சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன.
கடந்த ஜூலை மாதத்தில், தற்கொலையில் ஈடுபட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், தாராபுரத்தில் 39 பேரும், உடுமலையில் 59 பேரும் காப்பாற்றப்பட்டனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 105 பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டோர், தற்கொலை செய்து கொண்டோரது வயது, வருமானம், தற்கொலைக்கான காரணம், குடும்ப விவரங்கள் திரட்டப்பட்டு, மாவட்ட நிர்வாகத்துக்கு அளிக்கப்பட்டது. சரியான மாற்று நடவடிக்கை மூலமாக, தற்கொலை முயற்சியை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.உயிரை காப்பாற்றும் முயற்சியாக, திருப்பூர், உடுமலை மற்றும் தாராபுரம் பகுதிகளில் விஷ முறிவு சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன; திருப்பூர் அரசு மருத்துவமனையில், புதிய மனநல மருத்துவ பகுதி அமைக்கப்பட உள்ளது. தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் ஆலோசனை மையங்களின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும்.பிரச்னைகளால் பாதிக்கப்படுவர்கள், 10921 என்ற எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு, ஆலோசனை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகள், மகளிர் குழுக்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.தற்கொலை தடுப்புக்காக செயல் திட்டம் வடிவமைக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக, வேலை வாய்ப்புக்கான பயிற்சி வழங்கும் கல்வி நிறுவனங்கள், வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் மூலம் நாளை (9ம் தேதி) கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலமாக, வேலைவாய்ப்பின்றி தற்கொலை செய்ய முயற்சிப்பது தடுக்கப்படும். அரவாணிகள், மாற்றுத்திறனாளிகள், எச்.ஐ.வி., தொற்றுள்ளவர்களும் இப்பயிற்சி முகாமில்பங்கேற்கலாம். தற்கொலை முயற்சிகளை தடுக்கவும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அளிக்கும் செயல் திட்டங்களும் விரைவில் வடிவமைக்கப்படும். அதுவரை, மாவட்ட சமூக நல அலுவலர் தமிழரசி, தாட்கோ மாவட்ட மேலாளர் ஹரிநாராயணன், அரசு மருத்துவமனை டாக்டர் சக்திவேல் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்து உள்ளார்.


