/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/"ஆள்மாறாட்ட' ஊழியர்கள் உள்ளனராகூடன்குளத்தில் தீவிர விசாரணை"ஆள்மாறாட்ட' ஊழியர்கள் உள்ளனராகூடன்குளத்தில் தீவிர விசாரணை
"ஆள்மாறாட்ட' ஊழியர்கள் உள்ளனராகூடன்குளத்தில் தீவிர விசாரணை
"ஆள்மாறாட்ட' ஊழியர்கள் உள்ளனராகூடன்குளத்தில் தீவிர விசாரணை
"ஆள்மாறாட்ட' ஊழியர்கள் உள்ளனராகூடன்குளத்தில் தீவிர விசாரணை
ADDED : ஜூலை 23, 2011 02:42 AM
திருநெல்வேலி:கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 'ஆள்மாறாட்ட' ஊழியர்கள்
பணியில் உள்ளனரா என மத்திய தொழிற்பாதுகாப்புப்படையினர் தீவிர விசாரணை
நடத்தி வருகின்றனர்.கூடன்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி
துவக்கப்படவுள்ளது. வெளிநபர்கள் செல்ல முடியாத வகையில் அணுமின் நிலைய
வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அணுமின் நிலைய
வளாகம் முழுவதும் மத்திய தொழிற்பாதுகாப்புப்படை கட்டுப்பாட்டின் கீழ்
உள்ளது.
கடந்த 19ம்தேதி 'ஆள்மாறாட்டம்' செய்து அணுமின் நிலையத்தில் வெல்டிங்
பணியில் ஈடுபட்டு வந்த உத்தரப்பிரதேச மாநிலம் கஜிபூரை சேர்ந்த
முகமதுமீரஜ்கான்(25) கைது செய்யப்பட்டார். அவருக்கு போலி அடையாள அட்டை
தயாரித்து அளித்ததாக அஞ்சுகிராமம் நிறுவன உரிமையாளர் ரகுநாத் கைது
செய்யப்பட்டார். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி
வருகின்றனர்.இச்சம்பவத்தால் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து சர்ச்சை
எழுந்தது. இதையடுத்து அணுமின் நிலையத்தில் வேறு யாரும் போலி ஆவணங்களை
அளித்து ஆள்மாறாட்டம் செய்து பணியாற்றுகின்றனரா என மத்திய
தொழிற்பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனைத்துப்பிரிவு ஊழியர்களிடமும் ஆள் அடையாளச்சான்றிதழை பெற்று தொழிற்
பாதுகாப்புப்படையினர் விசாரித்து வருகின்றனர். 'ஆள்மாறாட்ட' பணியாளர்கள்
குறித்து கூடன்குளம் போலீசாரும் ரகசிய விசாரணை நடத்துகின்றனர்.


