ADDED : ஆக 01, 2011 03:47 AM
மோகனூர்: மின்கசிவால் ஏற்பட்ட தீப்பொறி, குடிசை வீட்டின் மேல் விழுந்ததில்,
வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது.மோகனூர் அடுத்த ஒருவந்தூர்புதூரை
சேர்ந்தவர் பாலசுப்ரமணி.
அவரது குடிசை வீட்டில் செல்வராஜ் (35) என்பவர்
வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் 3 மணிக்கு அருகில் உள்ள
மின் கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டது. அப்போது எழுந்த தீப்பொறி, செல்வராஜ்
குடிசை வீட்டின் மேல் விழுந்தது.அதனால், வீடு எரியத்துவங்கியது. தகவலறிந்த
நாமக்கல் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, அரைமணி நேரம் போராடி தீயை
அணைத்தனர். விபத்தில், குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலனாது.அதில்
இருந்து துணிகள், சாமான்கள், 3,000 ரூபாய் ரொக்கம், மளிகை பொருட்கள் என
அனைத்தும் எரிந்து நாசமானது. மோகனூர் போலீஸார் வழக்கு பதிந்து
விசாரிக்கின்றனர்.