ஓட்டுக்குப் பணம் : வேட்பாளர் தலைமறைவு
ஓட்டுக்குப் பணம் : வேட்பாளர் தலைமறைவு
ஓட்டுக்குப் பணம் : வேட்பாளர் தலைமறைவு
ADDED : அக் 12, 2011 08:02 PM
எழுமலை : மதுரை மாவட்டம் எழுமலையை அடுத்த சேடப்பட்டியில், ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து சுயேட்சை வேட்பாளர் பின்னியம்மாள் தலைமைறைவாகி <உள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்பகுதியில், 2 முறை எம்.எல். ஏ.,வாக இருந்தவர் தவமணி தேவர், இவரது மனைவி பின்னியம்மாள், சேடப்பட்டி ஊராட்சி 12 வார்டு சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். பின்னியம்மாளுக்கு ஓட்டு போடச் சொல்லி, அவரது உறவினர்களான ரூபி அருள்மொழி மற்றும் வினோத் குமாரும், வாக்காளர்களுக்கு ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாக கிராம நிர்வாக அலுவர் நாகசுந்தரத்திற்கு தகவல் வந்தது. இதுதொடர்பாக, கிராம நிர்வாக அலுவலர் போலீசிடம் புகார் செய்தார். இதனையடுத்து, ரூபி அருள்மொழி மற்றும் வினோத் குமார் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில், வேட்பாளர் பின்னியம்மாள் தலைமறைவாகி உள்ளார்.


