/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வி.ஏ.ஓ., தேர்வில் எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கு காலி பணியிடம் அறிவிக்க நடவடிக்கை தேவைவி.ஏ.ஓ., தேர்வில் எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கு காலி பணியிடம் அறிவிக்க நடவடிக்கை தேவை
வி.ஏ.ஓ., தேர்வில் எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கு காலி பணியிடம் அறிவிக்க நடவடிக்கை தேவை
வி.ஏ.ஓ., தேர்வில் எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கு காலி பணியிடம் அறிவிக்க நடவடிக்கை தேவை
வி.ஏ.ஓ., தேர்வில் எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கு காலி பணியிடம் அறிவிக்க நடவடிக்கை தேவை
ADDED : ஜூலை 25, 2011 11:32 PM
செஞ்சி : வி.ஏ.ஓ., தேர்வில் எஸ்.சி.,- எஸ்.டி., பிரிவை சேர்ந்த 1077 பேரின் பின்னடைவு காலி பணியிடங்களை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு எஸ்.சி.
எஸ்.டி., நலச் சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:தமிழகத்தில் காலியாக உள்ள 3,484 வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் பொதுப் பிரிவில் உள்ள 2,407 பேரின் தேர்ச்சி பட்டியல் மட்டும் வெளியிடப்பட்டது. இவர்களுக்கு வேலை வழங்க கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணியும் நடந்து வருகிறது.ஆனால் எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினர்களுக்கான 1,077 பணியிடங்களை தமிழக அரசு பின்னடைவு காலி பணியிடம் என அறிவித்தது. பின்னடைவு காலிபணியிடங்கள் குறித்து ஐகோர்ட்டில் வழக்கு இருப்பதால், இவர்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.கோர்ட்டில் தடை கோரியவரின் செயல் இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலை வாழ்மக்களின் இடஒதுக்கீட்டு கொள்கைக்கும் எதிரானது.இப்பிரச்னையில் தமிழக முதல்வர் தலையிட்டு அரசு சார்பில் கோர்ட்டில் முறையீடு செய்து தடை உத்தரவை நீக்கி, எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினர்களுக்கான வி.ஏ.ஓ., தேர்வு முடிவுகளை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


