/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மெகா சைஸ் பள்ளங்களுடன் நெடுஞ்சாலை : மாணவர்கள், வாகன ஓட்டிகள் தவிப்புமெகா சைஸ் பள்ளங்களுடன் நெடுஞ்சாலை : மாணவர்கள், வாகன ஓட்டிகள் தவிப்பு
மெகா சைஸ் பள்ளங்களுடன் நெடுஞ்சாலை : மாணவர்கள், வாகன ஓட்டிகள் தவிப்பு
மெகா சைஸ் பள்ளங்களுடன் நெடுஞ்சாலை : மாணவர்கள், வாகன ஓட்டிகள் தவிப்பு
மெகா சைஸ் பள்ளங்களுடன் நெடுஞ்சாலை : மாணவர்கள், வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : ஆக 01, 2011 01:51 AM
ஊத்துக்கோட்டை : மாநில நெடுஞ்சாலையில் ஆங்காங்கே உருவாகி உள்ள 'மெகா' சைஸ் பள்ளங்களால் மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், ஊத்துக்கோட்டை பகுதியில், அரசு மற்றும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், மின்வாரிய அலுவலகம், சார்நிலைக் கருவூலம், தபால் நிலையம், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் உள்ளன.தினமும், காலை மற்றும் மாலையில், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
மேலும், வேலை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வோர், இங்கு பஸ் ஏறி செல்கின்றனர். சாலை ஓரம் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்துள்ளதால் இரு வழிச்சாலை, ஒரு வழிச்சாலையாக மாறியுள்ளது.இதனிடையே, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செல்லும் வழியில் போந்தவாக்கம், சீத்தஞ்சேரி, ஒதப்பை, பூண்டி உள்ளிட்ட இடங்களிலும் ஆங்காங்கே, மெகா சைஸ் பள்ளங்கள் உருவாகியுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள், சாலை ஓரங்களை பயன்படுத்துகின்றனர்.பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், சாலையில் நடந்து செல்ல அச்சமடைகின்றனர். அசுர வேகத்தில் செல்லும் மணல் லாரிகளால் மாணவர்கள், பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ''திருவள்ளூர், ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சில இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே, மேற்கண்ட சாலைகளில் உள்ள பள்ளங்கள் சீர்படுத்தப்படும்,'' என்றார்.
எம்.யுவராஜ்