Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சிறுமலையில் பட்டா கோரிய வழக்குகள் : சென்னை ஐகோர்ட் தள்ளுபடி

சிறுமலையில் பட்டா கோரிய வழக்குகள் : சென்னை ஐகோர்ட் தள்ளுபடி

சிறுமலையில் பட்டா கோரிய வழக்குகள் : சென்னை ஐகோர்ட் தள்ளுபடி

சிறுமலையில் பட்டா கோரிய வழக்குகள் : சென்னை ஐகோர்ட் தள்ளுபடி

ADDED : ஜூலை 19, 2011 10:35 PM


Google News

சிறுமலை : திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மேற்கு வனப்பகுதிகளில் பட்டா வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆறு வழக்குகளை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

இங்கு 22 ஆயிரத்து 204 ஏக்கரை வன நிலமாக, 1977 ல், அரசு அறிவித்தது. இதை, 'பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக' (ரிசர்வ் பாரஸ்ட்) மாற்ற, திண்டுக்கல் வன நிர்ணய திட்ட அலுவலரால் அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஒப்புதலுக்காக அரசிடம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 3,881 எக்டேரை பாதுகாக்கப்பட்ட வனமாக, 2010 பிப்.,4 ல், அரசு அறிவித்தது. மீதமுள்ள நிலத்தையும் அறிவிக்கும்படி, வனத்துறை கோரியுள்ளது.



இங்குள்ள நிலங்களுக்கு பட்டா வழங்கவும்; பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்த அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரியும், 1,766 விவசாயிகள் சார்பில் ஆறு வழக்குகள், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதிகிருஷ்ணன், வனத்துறை சிறப்பு வக்கீல் கே.எம்.சுப்பிரமணியம் ஆஜராயினர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை சுட்டிக்காட்டி, 'சிறுமலை மேற்கு வனத்தில் பட்டா வழங்க கூடாது. அரசால் அறிவிக்கப்பட்ட வன நிலத்திற்கான அறிவிப்பு செல்லும்,' என, வழக்குகளை கோர்ட் தள்ளுபடி செய்தது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us