Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/கடல்சார் தொழிலில் அதிக வேலைவாய்ப்பு : துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தகவல்

கடல்சார் தொழிலில் அதிக வேலைவாய்ப்பு : துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தகவல்

கடல்சார் தொழிலில் அதிக வேலைவாய்ப்பு : துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தகவல்

கடல்சார் தொழிலில் அதிக வேலைவாய்ப்பு : துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தகவல்

ADDED : ஜூலை 29, 2011 01:44 AM


Google News

மதுரை : ''கடல்சார் தொழிலில் அதிக வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன,'' என்று தூத்துக்குடி துறைமுக பொறுப்புக்கழக தலைவர் சுப்பையா பேசினார்.

மதுரை - அருப்புக்கோட்டை ரோடு ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிக்கல் சயின்ஸில் பி.எஸ்., மரைன் இன்ஜினியரிங் மற்றும் நாட்டிக்கல் டெக்னாலஜி படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நேற்று நடந்தது. முதல்வர் சுப்ரமணியன், துணைமுதல்வர் சுபேந்து ஹாத்தி கலந்து கொண்டனர்.



கல்லூரி தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமை வகித்து பேசியதாவது: கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், பின்தங்கிய நிலையில் இருந்த கப்பல் சார் தொழில், தற்போது முன்னேற்றம் காணும் வகையில் உள்ளது. தற்காலத்திய கப்பல்கள் அதிக தொழில்நுட்பம் உள்ளவை. அதற்கேற்ப மாணவர்களின் திறன், மனப்பான்மை அமைய வேண்டியுள்ளது. தற்போது கடல்சார் வர்த்தகத்தில் நுழைந்துள்ள சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளுடன் நாம் போட்டியிடும் நிலையில் உள்ளோம்.



இதைக் கருத்தில் கொண்டு, இங்கு பாடத் திட்டத்துடன், வேலை வாய்ப்புள்ள படிப்பை அளிக்கிறோம். விரைவில் 'டோலாஸ்' என்னும் பயிற்சியை (டிரைனிங் ஆன் லேண்ட் அண்ட் சீ) பிளீட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளோம், என்றார். தூத்துக்குடி துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஏ.சுப்பையா மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பேசியதாவது: உலகளவில் இந்திய மாலுமிகள் 3 சதவீதம் உள்ளதை 9 ஆக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மத்திய கப்பல் துறை அமைச்சகம், இந்திய துறைமுகங்களின் தற்போதைய கொள்ளவை 3500 மில்லியன் அளவாக மாற்றும் திட்டம் செயலாக்கத்தில் உள்ளது. பல்வேறு உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் 2020ம் ஆண்டுக்குள் 2500 மில்லியன் டன் சரக்குகளை இந்திய துறைமுகங்கள் கையாளும்.



ö பரும்பாலான மக்களுக்கு கடல்சார் துறை வளர்ச்சி திட்டங்கள், அதன் மூலமான வேலை வாய்ப்பு பற்றி தெரிவதில்லை. கப்பல் கட்டும் துறை, கடல்சார் ஆய்வு, பயிற்சி என இத்துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. உலகளவில் இந்திய மாலுமிகள் அதிகளவில் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். தமிழக முதல்வரை விரைவில் சந்தித்து தூத்துக்குடியில் கடல் ஆய்வு தொடர்பான 'சென்டர் பார் எக்சலன்ஸ்' என்ற ஐ.ஐ.டி.,க்கு நிகரான மையத்தை துவக்குவது குறித்து பேச உள்ளேன், என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us