/உள்ளூர் செய்திகள்/சென்னை/விதிமீறல் கட்டடங்களுக்கு மின், குடிநீர் இணைப்பை தடுக்க சட்டத்திருத்தம் : ஐகோர்ட் பரிந்துரைவிதிமீறல் கட்டடங்களுக்கு மின், குடிநீர் இணைப்பை தடுக்க சட்டத்திருத்தம் : ஐகோர்ட் பரிந்துரை
விதிமீறல் கட்டடங்களுக்கு மின், குடிநீர் இணைப்பை தடுக்க சட்டத்திருத்தம் : ஐகோர்ட் பரிந்துரை
விதிமீறல் கட்டடங்களுக்கு மின், குடிநீர் இணைப்பை தடுக்க சட்டத்திருத்தம் : ஐகோர்ட் பரிந்துரை
விதிமீறல் கட்டடங்களுக்கு மின், குடிநீர் இணைப்பை தடுக்க சட்டத்திருத்தம் : ஐகோர்ட் பரிந்துரை
சென்னை : விதிமீறல் கட்டடங்களுக்கு மின்சாரம், குடிநீர் மற்றும் வடிகால் இணைப்புகள் கிடைப்பதை தடுக்க, சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என, ஐகோர்ட்டால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக்குழு பரிந்துரைத்துள்ளது.சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், புதிய கட்டடங்கள் கட்ட சி.எம்.டி.ஏ., மற்றும் அந்தந்த உள்ளாட்சி அமைப்பிடமும் அனுமதி பெறப்பட்டு, அதன்படி கட்டப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து அதிகாரிகள் பணி நிறைவு சான்றிதழ் அளிப்பர்.
ஆனால், விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு சி.எம்.டி.ஏ.,வின் பணி நிறைவு சான்றிதழ் பெற முடியாது. இத்தகைய சூழலில், கட்டட உரிமையாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, நிபந்தனைகளின் அடிப்படையில், மின்சாரம், குடிநீர் இணைப்புகளை பெற்று விடுகின்றனர்.இதன் மூலம், கட்டடங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடு கிறது. அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்துகின்றனர் என்ற காரணத்தை காட்டி சி.எம்.டி.ஏ., எடுக்கும் நடவடிக்கைகளை தடுத்துவிடுகின்றனர். இதனால், விதிமீறல் கட்டடங்கள் மீதான நடவடிக்கை தடைபடுகிறது.கண்காணிப்புக்குழு: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட, 33 ஆயிரம் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, சென்னை ஐகோர்ட், 2007ல் உத்தரவிட்டது.
சி.எம்.டி.ஏ., துணைத் தலைவர், மாநகராட்சி, மின்சார வாரியம், தீயணைப்புத்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், கட்டட அமைப்பியல் வல்லுனர்கள் என, 12 உறுப்பினர்களைக் கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு, சமீபத்தில் கூடி சில முக்கிய முடிவுகளை எடுத்தது.சட்டத்திருத்தம்: இதன்படி, பணி நிறைவு சான்று பெறாத சிறப்பு கட்டடங்கள், அடுக்குமாடி கட்டடங்களுக்கு குடிநீர், மின் இணைப்புகள் வழங்குவதை தடுக்கும் வகையில், தமிழ்நாடு மின் வாரிய சட்டம், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரிய சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை சி.எம்.டி.ஏ., விரைந்து எடுக்க வேண்டும் என, கண்காணிப்புக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து, மின் வாரிய, குடிநீர் வாரிய அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கான பணிகளை சி.எம்.டி.ஏ., துவங்கியுள்ளது.இத்தகைய சட்டத்திருத்தம் வந்தால், விதிமீறல் கட்டடங்கள் கோர்ட் உத்தரவு மூலம் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு பெறுவது தடுக்கப்படும் என, கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
வி.கிருஷ்ணமூர்த்தி