/உள்ளூர் செய்திகள்/திருச்சி/தொடர் டூவீலர் திருட்டு வாலிபர் அதிரடி கைதுதொடர் டூவீலர் திருட்டு வாலிபர் அதிரடி கைது
தொடர் டூவீலர் திருட்டு வாலிபர் அதிரடி கைது
தொடர் டூவீலர் திருட்டு வாலிபர் அதிரடி கைது
தொடர் டூவீலர் திருட்டு வாலிபர் அதிரடி கைது
ADDED : செப் 24, 2011 11:48 PM
திருச்சி: திருச்சி உறையூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட, சி.எஸ்.ஐ., மருத்துவமனை, அரசு மருத்துவமனை, பாண்டமங்கலம் பாரதிநகர் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலர்கள் திருட்டு போயின.
தொடர் திருட்டை தடுக்கும் வகையில், ஸ்ரீரங்கம் ஏ.சி., லலிதா தலைமையில், உறையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், எஸ்.எஸ்.ஐ., கமலநாதன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. குழுமணி சாலையில் உள்ள செக்போஸ்ட்டில் தனிப்படையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்கு இடமான வகையில், டூவீலரில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், எட்டரை போசம்பட்டி கீழத்தெருவை சேர்ந்த கருப்பண்ணன் மகன் பொன்னர் (28) என்பதும், உறையூர் பகுதியில் நடந்த தொடர் டூவீலர் திருட்டில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது. அதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐந்து டூவீலர்ளை பறிமுதல் செய்தனர்.


