/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன்அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன்
அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன்
அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன்
அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன்
ADDED : அக் 04, 2011 10:47 PM
சிவகாசி:''அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண, நடவடிக்கை எடுப்பேன்
,''என, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு, ம.தி.மு.க.,சார்பில்
போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசன் கூறினார்.சிவகாசி ஒன்றியம் 5வது வார்டு
மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ம.தி.மு.க.,சார்பில் போட்டியிடும் சீனிவாசன்,
சிவகாசி அனுப்பன்குளம் மற்றும் ஆண்டியாபுரம் பகுதிகளில் ஓட்டு
சேகரித்தார்.அப்போது அவர் கூறியதாவது: நான் வெற்றி பெற்றால், இப்பகுதியில்
பல ஆண்டுகளாக தீர்க்காமல் இருக்கும் அடிப்படை பிரச்னைகளான சாலை
,வாறுகால்,குடிநீர் மற்றும் தெருவிளக்குகளுக்கு உடனடி நடவடிக்கை
எடுக்கப்படும்.செயல்படாத மகளிர் சுகாதார வளாகம் செயல்படுத்த நடவடிக்கை
எடுக்கப்படும்.கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுத்து
நிறுத்தப்படும்.அனுப்பன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த
நடவடிக்கை எடுக்கப்படும் , என்றார்.
பிரசாரத்தில் மாவட்ட இலக்கிய அணி
புரவலர்கள் கோல்டன் சீனிவாசன்,பிரபாகரன்,மாநில பொதுக்குழு உறுப்பினர்
கமலக்கண்ணன்,ஒன்றிய செயலாளர் பங்காருசாமி,சிவகாசி நகர செயலாளர்
பாண்டியன்,ஆண்டியாபுரம் கிளை செயலாளர் தினகரன்,பொருளாளர்
ராஜேந்திரன்,அவைத்தலைவர் அப்பனசாமி,அனுப்பன்குளம் கிளை செயலாளர்
சிவக்குமார்,நிர்வாகிகள் நித்யானந்தம்,காளிராஜன் கலந்து கொண்டனர்.


