Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சுருளியில் காமன்லங்கு : வனத்துறை கண்டுபிடிப்பு

சுருளியில் காமன்லங்கு : வனத்துறை கண்டுபிடிப்பு

சுருளியில் காமன்லங்கு : வனத்துறை கண்டுபிடிப்பு

சுருளியில் காமன்லங்கு : வனத்துறை கண்டுபிடிப்பு

ADDED : ஆக 17, 2011 06:43 PM


Google News
தேனி: சுருளி அருவியில் காமன்லங்கு என்றழைக்கப்படும் குரங்குகள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதை, வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

தென்மாநிலங்களில் நாட்டு குரங்கு எனப்படும் வெள்ளைக்குரங்கு, தேவாங்கு, கருமந்தி, சிங்கவால் குரங்குகள் வாழ்கின்றன. இந்நிலையில், வனத்துறையினர் நடத்திய ஆய்வில், சுருளி, மேகமலை, எரசக்கநாயக்கனூர், தென்பழனி மலைப்பகுதிகளில், காமன்லங்கு என்றழைக்கப்படும் குரங்குகள் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளன. மாவட்ட வன அதிகாரி கணேசன் கூறுகையில், ''காமன்லங்கு எனப்படும் குரங்குகள் அபூர்வமானவை. இம்மாவட்ட வனப்பகுதியில் காணப்படுகின்றன. இவற்றை பாதுகாக்க சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us