/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சும்மா விடமாட்டோம்; "வீரபாண்டி'க்கு ஆறுதல்சும்மா விடமாட்டோம்; "வீரபாண்டி'க்கு ஆறுதல்
சும்மா விடமாட்டோம்; "வீரபாண்டி'க்கு ஆறுதல்
சும்மா விடமாட்டோம்; "வீரபாண்டி'க்கு ஆறுதல்
சும்மா விடமாட்டோம்; "வீரபாண்டி'க்கு ஆறுதல்
UPDATED : ஜூலை 24, 2011 07:19 AM
ADDED : ஜூலை 24, 2011 02:06 AM
கோவை : தி.மு.க., செயற்குழுவில், வீரபாண்டி ஆறுமுகத்திற்கு ஆறுதலாக கட்சி தலைவர் கருணாநிதி பேசினார்.
தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் பேசிய சிலர், '2ஜி' ஊழலும், குடும்ப ஆட்சியும் தான், கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம் என ஆவேசமாக பேசினர்.
முக்கிய தலைவர்களால், '2ஜி' குறித்து ஆழமாக பேச முடியவில்லை; காரணம், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியும் செயற்குழுவில் பங்கேற்றிருந்தார்.வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில், ''என்னை குற்றவாளியாக கூறி வழக்கு பதிந்த போதும், கட்சி சார்பில், அதைக் கண்டித்து ஒரு அறிக்கை கூட விடவில்லை. கட்சியினர் ஒவ்வொருவராக சிறைக்குள் தள்ளப்படுகின்றனர்.
எங்களை பாதுகாக்க, கட்சி என்ன செய்தது? இதற்கெல்லாம் விரைவாக முடிவு எடுக்காவிட்டால், கட்சி ஒன்றுமில்லாமல் போய்விடும்,'' என்றார். அதைக்ர்கட்ட கருணாநிதி, ''சும்மா விட்ருவோமாய்யா,'' என அவருக்கு ஆறுதல் கூறினார்.வெளியே காத்திருந்த தொண்டர்கள் பேசுகையில், 'கட்சியை பற்றி, அடிமட்ட தொண்டர்களிடம் தான் கேட்க வேண்டும்; மாவட்ட செயலாளர்களை அழைத்து, அவர்களிடம் கேட்காதீர்கள்,' என, ஆதங்க குரல் எழுப்பினர். கட்சி, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், இன்று நடக்கும் பொதுக்குழுவில், எடுக்கப்படும் முக்கிய முடிவு, அனைவராலும் பரபரப்பாக எதிர் பார்க்கப்படுகிறது.