ADDED : ஜூலை 25, 2011 12:12 AM

பெங்களூரு : கர்நாடகாவில் பா.ஜ., அரசுக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம், மைசூரு சாமுண்டி மலை ஏறி, சாமுண்டீஸ்வரி தேவியை தரிசனம் செய்வதை, அமைச்சர் ஷோபா வழக்கமாக கொண்டுள்ளார்.
கடந்தாண்டில், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களால் பிரச்னை ஏற்பட்ட போது, ஒரு நாள் விரதம் இருந்தார். தற்போது, சட்டவிரோத சுரங்கத் தொழில் விவகாரம் மீண்டும் பா.ஜ.,வில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று காலை 6.15 மணிக்கு அமைச்சர் ஷோபா, சாமுண்டி மலையேறினார். இடையே எங்கும் நிற்காமல், 7.10 க்கு கோவிலை அடைந்தார். அமைச்சர் ஷோபாவுக்கு, கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 20 நிமிட தரிசனத்திற்கு பின் வெளியே வந்த அமைச்சர், அருகிலிருந்த ஈஸ்வரன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.