/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நகராட்சி மார்க்கெட்டில் "பார்க்கிங்' தளம் தி.மு.க.,பொய் பிரசாரம் என குற்றச்சாட்டுநகராட்சி மார்க்கெட்டில் "பார்க்கிங்' தளம் தி.மு.க.,பொய் பிரசாரம் என குற்றச்சாட்டு
நகராட்சி மார்க்கெட்டில் "பார்க்கிங்' தளம் தி.மு.க.,பொய் பிரசாரம் என குற்றச்சாட்டு
நகராட்சி மார்க்கெட்டில் "பார்க்கிங்' தளம் தி.மு.க.,பொய் பிரசாரம் என குற்றச்சாட்டு
நகராட்சி மார்க்கெட்டில் "பார்க்கிங்' தளம் தி.மு.க.,பொய் பிரசாரம் என குற்றச்சாட்டு
ADDED : அக் 12, 2011 02:55 AM
ஊட்டி : 'ஊட்டி மார்க்கெட்டை காலி செய்து பார்க்கிங் தளம் அமைக்கப்படும்,' என தி.மு.க., பொய் பிரசாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மாநில உணவுத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:மாநில முதல்வர் வியாபாரிகளின் நலனில் மிகுந்த அக்கறையும், பாசமும் கொண்டு செயல்படுகிறார்.
மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ள நிலையில், சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவிய தி.மு.க., வினர், வியாபாரிகளையும், பொதுமக்களையும் திசை திருப்பும் வகையில்,'ஊட்டி மார்க்கெட்டை காலி செய்து பார்க்கிங் தளம் அமைக்கப்படும்,' என்ற நடைமுறைக்கு சாத்தியமில்லாத பொய் பிரசாரத்தை மேற்கொண்டு வருவது கண்டனத்திற்குரியது. இதுபோன்ற திட்டம் மாநில அரசிடமோ, மாவட்ட நகரமன்ற நிர்வாகத்திடமோ இல்லை. எனவே, ஊட்டியின் பொதுமக்களும், வியாபாரிகளும் இதனை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு புத்திசந்திரன் கூறியுள்ளார்.


