/உள்ளூர் செய்திகள்/சேலம்/தே.மு.தி.க.,வை சேர்ந்த இருவர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல்தே.மு.தி.க.,வை சேர்ந்த இருவர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல்
தே.மு.தி.க.,வை சேர்ந்த இருவர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல்
தே.மு.தி.க.,வை சேர்ந்த இருவர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல்
தே.மு.தி.க.,வை சேர்ந்த இருவர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல்
ADDED : செப் 28, 2011 01:19 AM
சேலம்:சேலம் மாநகராட்சி, அம்மாபேட்டை மண்டலத்தில் தே.மு.தி.க.,வை சேர்ந்த இருவர், சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தனர். பழைய கட்சி நோட்டீஸ்களை கிழித்து எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாநகராட்சி, அம்மாபேட்டை மண்டலத்தில், 32வது வார்டில், சாந்தி என்பவர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்த பின், தான் கொண்டு வந்திருந்த தே.மு.தி.க., கட்சி நோட்டீஸ்களை, அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தின் வெளியே வேட்பாளர் சாந்தி கிழித்தெறிந்தார். இதனால், அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இதுதொடர்பாக அவர் கூறியதாவது:தே.மு.தி.க., ஆரம்பித்த காலத்தில் இருந்து, நான் கட்சி பணியாற்றி வருகிறேன். கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும், தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டேன். தொண்டரணி செயலாளராக பணியாற்றி வந்தேன். மாநகராட்சி தேர்தலில், 32வது வார்டு கவுன்சிலராக போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என, நம்பி தே.மு.தி.க., கட்சியில், 5,000 ரூபாய் கட்டி விருப்ப மனு கொடுத்தேன். கடைசி நேரத்தில் வேறொருவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் விளக்கம் கேட்ட போது, அவர் பதிலளிக்கவில்லை. இதனால், சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். கடந்த தேர்தலில் எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்த்தேன். கிடைக்கவில்லை. இதனால், வெறுப்படைந்து தே.மு.தி.க., கட்சி நோட்டீஸ்களை கிழித்தெறிந்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.அம்மாபேட்டை மண்டலத்தில் ஒன்பதாவது வார்டில், பார்த்தீபன் என்பவர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.இது குறித்து அவர் கூறியதாவது:விஜயகாந்த் ரசிகராகவும், உதயநிலா ரசிகர் மன்ற செயலாளராகவும் இருந்துள்ளேன். கட்சி ஆரம்பித்ததும் தீவிரமாக பணியாற்றி வந்தேன். தே.மு.தி.க., மாநகர் மாவட்ட ஊனமுற்றோர் சங்க துணை செயலாளராக பணியாற்றி வந்தேன்.இந்த முறை கவுன்சிலர் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து, விருப்ப மனு கட்டினேன். ஆனால், வேறொருவருக்கு சீட் வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்தும் பலன் கிடைக்கவில்லை. எனவே, நான் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.