/உள்ளூர் செய்திகள்/தேனி/பெரியகுளத்தில் கோஷ்டி மோதல் 6 பேர் காயம்:7 பேர் கைதுபெரியகுளத்தில் கோஷ்டி மோதல் 6 பேர் காயம்:7 பேர் கைது
பெரியகுளத்தில் கோஷ்டி மோதல் 6 பேர் காயம்:7 பேர் கைது
பெரியகுளத்தில் கோஷ்டி மோதல் 6 பேர் காயம்:7 பேர் கைது
பெரியகுளத்தில் கோஷ்டி மோதல் 6 பேர் காயம்:7 பேர் கைது
ADDED : ஆக 22, 2011 12:21 AM
பெரியகுளம் : பெரியகுளத்தில் துக்கவீட்டில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில்,
இருதரப்பைச் சேர்ந்த ஆறு பேர் காயமடைந்தனர்.
ஏழு பேரை போலீசார் கைது
செய்தனர். பெரியகுளம் எ.காமாட்சிபுரத்தை சேர்ந்த வேலுச்சாமி மகள் பரிமளாவை,
அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார், காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனால் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வேலுச்சாமியின் சித்தப்பா
பழனிச்சாமி இறந்ததால்,அதில் பங்கேற்க, வேலுச்சாமியின் மூத்த மருமகன்
சென்றாயன் வந்தார். அவரை முத்துக்குமார் தடுத்தார். இதனால்
இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. முத்துக்குமார் தனது தனது
ஆதரவாளர்களுடன் அரிவாள் மற்றும் கம்பால் தாக்கியதில், வேலுச்சாமி,அவரது
உறவினர்கள் கலையரசன், நாகராஜன் ஆகியோர் காயமடைந்தனர். வடகரை போலீசார்
முத்துக்குமார், பழனிச்சாமி, ரமேஷ், முத்துப்பாண்டி ஆகியோரை கைது
செய்தனர். வேலுச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முருகன், கலையரசன்,
நாகராஜன், பால்கண்ணன், சிலம்பரசன், மற்றொரு முருகன், கருத்தப்பாண்டி
ஆகியோர் தாக்கியதில், முத்துக்குமார், அவரது தந்தை முருகன்,பெருமாள்
ஆகியோர் காயம் அடைந்தனர். போலீசார் முருகன், கலையரசன், நாகராஜன் ஆகியோரை
கைது செய்தனர்.