Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சமுதாய பிரச்னை, தொல்லைகளை தீர்க்க சமூக நீதி பாதுகாப்பு இயக்கம் பாடுபடும் : சாமிக்கண்ணு உறுதி

சமுதாய பிரச்னை, தொல்லைகளை தீர்க்க சமூக நீதி பாதுகாப்பு இயக்கம் பாடுபடும் : சாமிக்கண்ணு உறுதி

சமுதாய பிரச்னை, தொல்லைகளை தீர்க்க சமூக நீதி பாதுகாப்பு இயக்கம் பாடுபடும் : சாமிக்கண்ணு உறுதி

சமுதாய பிரச்னை, தொல்லைகளை தீர்க்க சமூக நீதி பாதுகாப்பு இயக்கம் பாடுபடும் : சாமிக்கண்ணு உறுதி

ADDED : ஜூலை 25, 2011 11:21 PM


Google News

கள்ளக்குறிச்சி : சமுதாயத்தில் ஏற்படும் பிரச்னைகள், தொல்லைகளை தீர்ப்பதற்கும் சமூக நீதி பாதுகாப்பு இயக்கம் பாடுபடுமென அதன் நிறுவனர் தெரிவித்தார்.மாவட்ட சமூக நீதி பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.

கூட்டத்திற்கு இயக்க நிறுவனர் சாமிக்கண்ணு தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் சஞ்சீவிராயன், வக்கீல் இளங்கோவன் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ஞானமணி வரவேற்றார்.இதில், பல்வேறு சங்க பிரதிநிதிகள் முத்துசாமி, செல்வக்குமார், அப்துல்கரீம், வித்யா, ஜெயக்குமார், அருண்கென்னடி, மணி, செல்லமுத்து, திலகம், எத்திராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சமூக பாதுகாப்பு இயக்க நிறுவனர் சாமிக்கண்ணு பேசியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில் அரசாங்கம் மற்றும் அதிகார வர்க்கங்களால் பல்வேறு பிரச்னைகள் எழுந்து வருகிறது. சமூக விரோதிகளாலும் மக்களுக்கு பிரச்னைகள் எழுகின்றது.



இவற்றை தட்டிக் கேட்பதற்காக இந்த இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. ஒருவன், வஞ்சிக்கப்படக்கூடிய இடத்தில் தட்டிக் கேட்பவனே உயர்ந்த மனிதன்.சமுதாயத்தில் ஏற்படும் பிரச்னைகள், தொல்லைகளை தீர்ப்பதற்கும் முன்வர வேண்டும். சமுதாயத்தில் ஏற்படும் பொதுநல பிரச்னையில் சமூக நீதி பாதுகாப்பு இயக்கம் தலையிடும். மக்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளை பெற்றுத் தரும். அரசாங்கம் மற்றும் அதிகார வர்க்கங்கள் நம்மை போன்று முன்னேறி வருபவர்களை தடுக்க வேண்டும் என்று கருதுகின்றன.தனிநபர் நலனின்றி பொது நன்மையை மட்டுமே அடிப்படையாக கொண்டுள்ள இந்த இயக்கம் மக்கள் பிரச்னைகளுக்கு கலெக்டர், அமைச்சர், கோர்ட் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கும். நகர வளர்ச்சியில் உள்ள குறைபாடுகளுக்கும் தீர்வு காணப்படும்.இவ்வாறு சாமிக்கண்ணு பேசினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us