/உள்ளூர் செய்திகள்/சென்னை/நாட்டு வெடிகுண்டு வீசியது யார்? குழப்பத்தில் போலீஸ்நாட்டு வெடிகுண்டு வீசியது யார்? குழப்பத்தில் போலீஸ்
நாட்டு வெடிகுண்டு வீசியது யார்? குழப்பத்தில் போலீஸ்
நாட்டு வெடிகுண்டு வீசியது யார்? குழப்பத்தில் போலீஸ்
நாட்டு வெடிகுண்டு வீசியது யார்? குழப்பத்தில் போலீஸ்
ADDED : ஜூலை 27, 2011 02:50 AM
சென்னை : நகைப்பட்டறை உரிமையாளர் வீட்டில் வீசப்பட்ட, ஐஸ்கிரீம் பந்தில்
தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு எப்படி வந்தது, வீசியது யார் என
தெரியாமல் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.சென்னை யானைக்கவுனி வால்டாக்ஸ்
சாலையைச் சேர்ந்தவர் சுதாகரன். நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது வீட்டு
மொட்டை மாடியில் நேற்று முன்தினம், பிளாஸ்டிக் பந்து ஒன்று கிடந்தது. அதில்
வெடி மருத்துகள் அடைக்கப்பட்டு, திரியும் வைக்கப்பட்டிருந்தது.
பேப்பர்களும் சுற்றப்பட்டிருந்தன.பதறிப்போன சுதாகரன், யானைக்கவுனி போலீசில்
ஒப்படைத்தார். போலீசார் கொடுத்த தகவலின்பேரில், வெடிகுண்டு நிபுணர்கள்
வந்து சோதனை செய்தனர். அவை வெடிக்கும் தன்மையுடையது என்பதை உறுதி
செய்ததோடு, அதை செயல் இழக்கச் செய்தனர்.சில மாதங்களுக்கு முன் வியாசர்பாடி
அம்பேத்கர் கல்லூரி அருகேயும், மயிலாப்பூரில் வீடு ஒன்றிலும் இதுபோன்று
நாட்டு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய யாரும்
சிக்காத நிலையில், இந்த மூன்று சம்பவங்களுக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா
என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை யார் தயாரித்தது, எதற்காக தயாரித்தனர், சுதாகரன் வீட்டின் மேல் வீசியது
ஏன் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதனால், போலீசார் குழப்பம்
அடைந்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு, வெடித்திருந்தால்
விபரீதமாகியிருக்கும் என்பதால், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை
ஏற்படுத்தியுள்ளது.வீட்டு உரிமையாளர் சுதாகரன் கூறும்போது,'நான் போலீசில்
புகார் செய்தபோது, என்னைத் துருவித்துருவி விசாரித்தனர்.
வீட்டிற்குள் வந்து என்னிடம் விசாரித்து விட்டுச் சென்றனர். மற்றபடி யார்
வீசியது என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை' என்றார். போலீசார்
கூறும்போது,'பிளாஸ்டிக் பந்தில் வெடி மருந்து இருந்தது உண்மைதான். அது
நாட்டு வெடிகுண்டு என்றோ, மர்ம நபர்கள் சதி திட்டத்துடன்
தயாரித்திருப்பார்களா என்று தெரியவில்லை. திருவிழாவின்போது, வெடிக்க
தயாரித்த வீரியம் மிக்க பட்டாசு, வெடிக்காமல், மாடியில் விழுந்திருக்கவும்
வாய்ப்புள்ளது. பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம்' என்றனர்.