/உள்ளூர் செய்திகள்/சென்னை/வேலையும், லாபத்தில் பங்கும் வேண்டும்: ராமதாஸ் கருத்துவேலையும், லாபத்தில் பங்கும் வேண்டும்: ராமதாஸ் கருத்து
வேலையும், லாபத்தில் பங்கும் வேண்டும்: ராமதாஸ் கருத்து
வேலையும், லாபத்தில் பங்கும் வேண்டும்: ராமதாஸ் கருத்து
வேலையும், லாபத்தில் பங்கும் வேண்டும்: ராமதாஸ் கருத்து
ADDED : ஆக 01, 2011 01:42 AM
சென்னை : 'அரசின் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தினால், நில உரிமையாளர் குடும்பத்திற்கு வேலையும், லாபத்தில் பங்கும் தர வேண்டும்' என, ராமதாஸ் கூறியுள்ளார்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:'அரசின் நில எடுப்புக் கொள்கைக்கு எதிராக, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு அளித்தல் சட்டம் திருத்தப்படும்' என மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.இதன் வரைவுச் சட்டத்தில், எக்காரணம் கொண்டும் பாசன வசதி பெறும் நிலங்கள் அல்லது பயிர்கள் விளையும் நிலங்கள் கையகப்படுத்தப்படாது.
'அரசின் திட்டங்களுக்காக நிலத்தை கையகப்படுத்த, பாதிக்கப்படும் நில உரிமையாளர்களில், 80 சதவீதத்தினரின் ஒப்புதலைப் பெற வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. இது பா.ம.க., போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி.தவிர்க்க முடியாத காரணங்களால், அவசரத் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தினால், நகர்ப்புறங்களாக இருந்தால், சந்தை மதிப்பை விட இரண்டு மடங்கும், கிராமப்புறங்களானால் ஆறு மடங்கும் இழப்பீடு வழங்கப்படும் என்றும், வரைவுச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.இந்த இழப்பீடு போதாது; கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பை விட, 10 மடங்கு கூடுதல் விலை தர வேண்டும். நில உரிமையாளர் குடும்பத்தினருக்கு, அந்த நிலத்தில் துவங்கப்படும் நிறுவனத்தில் வேலையும், லாபத்தில் குறிப்பிட்ட சதவீதமும் வழங்க வேண்டும்.சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக, விளை நிலங்களை கையகப்படுத்துவதால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறதே தவிர, எவ்வகையிலும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. எனவே, விளை நிலங்கள், குடியிருப்புப் பகுதிகளில், சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.