Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/விதிமுறைகளை மீறி இயங்கிய மீன்பாடி வண்டி அதிகாரிகள் சோதனையில் மோட்டார் பறிமுதல்

விதிமுறைகளை மீறி இயங்கிய மீன்பாடி வண்டி அதிகாரிகள் சோதனையில் மோட்டார் பறிமுதல்

விதிமுறைகளை மீறி இயங்கிய மீன்பாடி வண்டி அதிகாரிகள் சோதனையில் மோட்டார் பறிமுதல்

விதிமுறைகளை மீறி இயங்கிய மீன்பாடி வண்டி அதிகாரிகள் சோதனையில் மோட்டார் பறிமுதல்

ADDED : செப் 10, 2011 03:45 AM


Google News
தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்று விதிமுறைகளை மீறி மோட்டார் பொறுத்தி மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இயக்கப்பட்ட மீன்பாடி லாரி மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டது. வாகன பதிவு எண் எழுதாத இரண்டு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம் உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் சந்திரசேகரன், பாத்திமா பர்வீன் ஆகியோர் நேற்று சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷன் அருகில் மெயின் ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் சோதனையிடப்பட்டது.

மீன்பாடி வண்டிகளை பொறுத்தமட்டில் மோட்டார் பொறுத்தி ஓட்டக் கூடாது என்று அரசு மற்றும் கோர்ட் உத்தரவு உள்ளது. ஆனால் விதி முறைகளை மீறி இந்த வண்டிகள் இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நேற்றைய சோதனையின் போது மீன்பாடி வண்டியை மடக்கிய அதிகாரிகள் அந்த வண்டியின் மோட்டாரை மெக்கானிக் உதவியுடன் அகற்றி பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து வாகன சோதனை மேற்கொண்ட போது புதிய இரண்டு சக்கர வாகனம் பதிவு எண் எழுதாமல் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் விடப்பட்டது. இதே போல் அரசின் புதிய உத்தரவுப்படி வாகனங்களில் நம்பர் எழுதாத 12 வாகனங்களில் ஆர்.சி பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து இது போன்ற சோதனை நடத்தப்படும். மீன்பாடி வண்டிகளில் எந்த காரணம் கொண்டும் மோட்டார் பொறுத்தி ஓட்டக் கூடாது. மிதிவண்டி போல் தான் ஓட்ட வேண்டும். இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோட்டார் வாகன ஆய்வாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us