/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/48 காலனிக்கு காவிரி கூட்டுகுடிநீர் 12வது வார்டு காங்., வேட்பாளர்48 காலனிக்கு காவிரி கூட்டுகுடிநீர் 12வது வார்டு காங்., வேட்பாளர்
48 காலனிக்கு காவிரி கூட்டுகுடிநீர் 12வது வார்டு காங்., வேட்பாளர்
48 காலனிக்கு காவிரி கூட்டுகுடிநீர் 12வது வார்டு காங்., வேட்பாளர்
48 காலனிக்கு காவிரி கூட்டுகுடிநீர் 12வது வார்டு காங்., வேட்பாளர்
ADDED : அக் 05, 2011 11:40 PM
சிவகங்கை : ''என்னை 2வது முறையாக கவுன்சிலராக்கினால், 48 காலனி மக்களுக்கு
காவிரி கூட்டுகுடிநீர் கிடைக்க பாடுபடுவேன்,'' என, 12வது வார்டிற்கு காங்.,
சார்பில் போட்டியிடும் சிஎல்.,சரவணன் தெரிவித்தார்.
வேட்பு மனு தாக்கல்
செய்த அவர் கூறியதாவது: கடந்த முறை கவுன்சிலராக இருந்தபோது வார்டிற்குள்
நகராட்சி அலுவலகம் கொண்டு வந்தேன். 48 காலனி நகராட்சி துவக்கப்பள்ளியை
நடுநிலையாக தரம் உயர்ந்தினேன். மீண்டும் வந்தால், இப்பள்ளியை
உயர்நிலையாக்குவேன். இப்பள்ளிக்கு 5.5 ஏக்கர் நிலம், வகுப்பறை
கட்டடத்திற்கு 28.5 லட்சம் ஒதுக்கினேன். பிள்ளைவயல் காளியம்மன் கோயில்
குடியிருப்பில் தரைமட்ட தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்படுகிறது. தொண்டி
ரோட்டில் ஒரு லட்சம் ரூபாய்க்கு குடிநீர் மேல்நிலைதொட்டி கட்டியுள்ளேன்.
48 காலனி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் கிடைக்க பாடுபடுவேன் என்றார்.


