Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்களை வழங்கிய பின் தேர்தல் நடத்த வேண்டும்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்களை வழங்கிய பின் தேர்தல் நடத்த வேண்டும்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்களை வழங்கிய பின் தேர்தல் நடத்த வேண்டும்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்களை வழங்கிய பின் தேர்தல் நடத்த வேண்டும்

ADDED : அக் 08, 2011 01:13 AM


Google News

திருநெல்வேலி : உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் வழங்கிய பின் தேர்தலை நடத்த வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனைக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நெல்லையில் தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனைக்கூட்டம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் நடந்தது. பனைத்தொழிலாளர் சங்கத்தலைவர் சேவியர் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் ராயப்பன், அமைப்பாளர்கள் கோபிநாத், தங்கராஜ் உட்பட பலர் பேசினர்.கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பனை, தென்னை மரங்கள் குறைந்து வருகின்றன, பனை, தென்னை மரங்களை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2012 ஜனவரியில் கன்னியாகுமரியில் துவங்கி சென்னை வரை பேரணி நடத்துவது, கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை அரசு நீக்குவது, கள் இறக்கி மரத்தடியில் விற்கும் முறையை அனுமதிப்பது, வெளிநாடுகளை போல கள்ளை பதப்படுத்தி டின், பாட்டில்கள், பாக்கெட்களில் அடைத்து சந்தைப்படுத்துவது, மொலாசஸை மூலப்பொருளாக கொண்ட டாஸ்மாக் மது விற்பனைக்கு தடை விதிப்பது, பனை, தென்னை மரங்கள் சார்ந்த தொழில்களை பாதுகாப்பது, உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் வழங்கிய பின் தேர்தல் நடத்துவது, நல்லவர்கள் உள்ளாட்சிப்பொறுப்புகளுக்கு வர அரசியல் கட்சிகளின் சின்னம், தலையீடு இன்றி தேர்தல் நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறும்போது, ''மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு கதிரேசன் கொள்கை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது எந்த கட்சிக்கும் எதிராக அல்ல. கதிரேசனின் வெற்றி அரசியல் திருப்புமுனை ஏற்படுத்தும்'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us