/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வாகன ஆக்கிரமிப்பால் போக்குவரத்து ஸ்தம்பிப்புவாகன ஆக்கிரமிப்பால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
வாகன ஆக்கிரமிப்பால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
வாகன ஆக்கிரமிப்பால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
வாகன ஆக்கிரமிப்பால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
ADDED : அக் 12, 2011 01:38 AM
ஈரோடு: ஈரோடு கனிமார்க்கெட் பகுதியில் வாகனங்கள் ஆக்கிரமிப்பால், நேற்று
கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.தீபாவளி பண்டிகைக்கு 15 நாட்களே
உள்ளதால், ஈரோடு மாநகரில் உள்ள ஜவுளி கடைகள், மளிகை கடைகள், எலக்ட்ரானிக்
கடைகள் உள்பட பல்வேறு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பண்டிகை சீஸன்
துவங்குவதை அடுத்து வெளிமாநிலங்களில் இருந்து ஜவுளி வரத்தும்
அதிகரித்துள்ளது. நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பகல் வேளையில்
லாரிகள், மாட்டு வண்டி உள்ளிட்ட பிற வாகனங்கள் மூலம் சரக்கு கையாள்வது தடை
செய்யப்பட்டுள்ளதாக, போலீஸார் அறிவித்தனர்.
ஆனால், நேற்று, ஈரோடு
சுற்றுவட்டார பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகளை மாட்டு வண்டிகள்,
ஆட்டோ, வேன் மற்றும் லாரிகள் மூலம் கனிமார்க்கெட் பகுதியில் உள்ள ஜவுளி
குடோன்களுக்கு, எப்போதும் போல் கொண்டு வந்தனர். சாலையோரம் ஆங்காங்கே
வண்டியை நிறுத்தி, சரக்கு ஏற்றி, இறக்கினர். ஜவுளி சந்தைக்கு வரும் மக்கள்
மற்றும் இதர பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டுநர்கள் சாலையை கடப்பதே பெரும்
சவாலாக இருந்தது.தவிர, பண்டிகை சீஸனையொட்டி, அனைத்து ரோடுகளிலும்,
ஜவுளிக்கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இக்கடைகளில் மாநகராட்சியும் சுங்கவரி
கட்டணம் வசூல் செய்கிறது. இந்த கடைகளை கனிமார்க்கெட் உட்பகுதியில் காலியாக
உள்ள கடைகளுக்கு மாற்றினாலே ஓரளவு போக்குவரத்து நெரிசல் சீராகும்.


