/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/தி.மு.க., கூட்டத்தில் ஜெ., சோனியா மீது விமர்சனம் : மாஜி., அமைச்சர் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவுதி.மு.க., கூட்டத்தில் ஜெ., சோனியா மீது விமர்சனம் : மாஜி., அமைச்சர் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு
தி.மு.க., கூட்டத்தில் ஜெ., சோனியா மீது விமர்சனம் : மாஜி., அமைச்சர் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு
தி.மு.க., கூட்டத்தில் ஜெ., சோனியா மீது விமர்சனம் : மாஜி., அமைச்சர் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு
தி.மு.க., கூட்டத்தில் ஜெ., சோனியா மீது விமர்சனம் : மாஜி., அமைச்சர் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : ஆக 01, 2011 01:56 AM
களியக்காவிளை : களியக்காவிளையில் நடந்த தி.மு.க., கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், அகில இந்திய காங்., தலைவர் சோனியா காந்தியையும் விமர்சித்ததாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
களியக்காவிளையில் அண்மையில் தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் காங்., தலைவர் சோனியா காந்தி மீது விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. அ.தி.மு.க., பிரமுகர் படந்தாலுமூடு உதயகுமார் களியக்காவிளை போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாக விமர்சித்ததாகவும், தன்னை இரும்பு செயரால் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புகாரின் அடிப்படையில் தி.மு.க., பேச்சாளர் வாகை முத்தளகன், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், களியக்காவிளை பேரூர் செயலாளர் ஜெயசந்திரன், மேல்புறம் ஒன்றிய பொருளாளர் மாகின் அபுபக்கர் மற்றும் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் மேல்புறம் ஒன்றிய காங்., பிரமுகர் பிரேயர் பிரின்ஸ் காங்., தலைவர் சோனியா காந்தியை தி.மு.க., கூட்டத்தில் தரக்குறைவாக விமர்சித்ததாகவும், காங்., கட்சியினருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் வாகை முத்தளகன் மற்றும் மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இது தொடர்பாக களியக்காவிளை போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.