/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க சிதம்பரம் வட்ட கிளைக் கூட்டம்ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க சிதம்பரம் வட்ட கிளைக் கூட்டம்
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க சிதம்பரம் வட்ட கிளைக் கூட்டம்
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க சிதம்பரம் வட்ட கிளைக் கூட்டம்
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க சிதம்பரம் வட்ட கிளைக் கூட்டம்
ADDED : அக் 06, 2011 01:17 AM
சிதம்பரம் : ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க சிதம்பரம் வட்ட கிளைக் கூட்டம்
சிதம்பரத்தில் நடந்தது.
தலைவர் கண்ணப்பன் தலைமை தாங்கினார். 21ம் ஆண்டின்
வரவு செலவு கணக்கை சிதம்பரம் வாசித்தார். மாநில பேரவைக் கூட்டம் குறித்து
நம்மாழ்வார் பேசினார். சாமிநாதன், நடராஜன், சுப்ரமணியன், நாகப்பன்,
சாரதாம்பாள், கலியபெருமாள், கிட்டப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 2006ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி முடிய
உள்ள நிலுவைத் தொகையை வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும். மத்திய அரசு
வழங்கியது போல் தமிழக அரசும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு
குறைந்தபட்ச ஓய்வூதியம் 3,500 ரூபாயாக வழங்க வேண்டும். தொகுப்பூதியம்
பிடித்தம் செய்வதை 15 ஆண்டிலிருந்து 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்பது
உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


