ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படி உயர்வு
ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படி உயர்வு
ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படி உயர்வு
ADDED : அக் 08, 2011 09:13 PM
சென்னை:அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதேபோல், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு வழங்கப்படும் தனிப்பட்ட ஊதியத்தையும் அரசு உயர்த்தியுள்ளது.ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றில் அகவிலைப்படி, 51 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் இருந்து அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வருகிறது. தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கான தனிப்பட்ட ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதம் 600 ரூபாய்க்கு கீழ் தனிப்பட்ட ஊதியம் பெறுவோருக்கு மாதம் 20 ரூபாயும், 600 ரூபாய்க்கு மேல் பெறும் ஊழியர்களுக்கு 40 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு, உள்ளாட்சிகளில் பணிபுரியும் மேல்நிலைத் தொட்டி பராமரிப்பாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கும் பொருந்தும் என, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


