/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/குளிர்பானத்தில் பல்லி குடித்த பெண் மயக்கம்குளிர்பானத்தில் பல்லி குடித்த பெண் மயக்கம்
குளிர்பானத்தில் பல்லி குடித்த பெண் மயக்கம்
குளிர்பானத்தில் பல்லி குடித்த பெண் மயக்கம்
குளிர்பானத்தில் பல்லி குடித்த பெண் மயக்கம்
ADDED : செப் 06, 2011 01:43 AM
ஈரோடு : பல்லி கிடந்த குளிர்பானத்தை குடித்த பெண், உடல்நிலை
பாதிக்கப்பட்டார்.
ஈரோடு மண்டபம் வீதியை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மனைவி
முஸ்திக்பேகம் (40), வீட்டுக்கு அருகே உள்ள பெட்டிக் கடையில், நேற்று,
'ஃபேண்டா' குளிர்பானம் வாங்கி குடிக்க ஆரம்பித்தார். அழுகிய வாடை வரவே,
முஸ்திக்பேகம் அதிர்ச்சி அடைந்தார். குளிர்பானத்தில் பல்லி இறந்து
கிடந்தது. சில நிமிடங்களில் தலைசுற்றி மயக்கம் வரவே, ஈரோடு தனியார்
மருத்துவனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நுகர்வோர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக சம்சுதின் தெரிவித்தார்.


