/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன் : ராமேஸ்வரம் தி.மு.க., வேட்பாளர் பாஸ்கரன்அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன் : ராமேஸ்வரம் தி.மு.க., வேட்பாளர் பாஸ்கரன்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன் : ராமேஸ்வரம் தி.மு.க., வேட்பாளர் பாஸ்கரன்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன் : ராமேஸ்வரம் தி.மு.க., வேட்பாளர் பாஸ்கரன்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன் : ராமேஸ்வரம் தி.மு.க., வேட்பாளர் பாஸ்கரன்
ADDED : அக் 13, 2011 09:17 PM
ராமேஸ்வரம் : 'ராமேஸ்வரத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன்' என நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.
ராமேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயில் பகுதியில் பிரசாரத்தில் அவர் பேசியதாவது: ராமேஸ்வரம் நகராட்சி மீன் மார்க்கெட்டிற்கு புதிய கட்டடம் கட்டுவேன். மீன் வாகனங்களுக்காக பைபாஸ் ரோடு அமைப்பேன். மீன் பதப்படுத்தும் நிலையம் அமைப்பேன். வெண்மணி நகர், சிவகாமிநகர், முருங்கைவாடி, பெரியார் நகர்ர, சுபாஷ் நகர், லெட்சுமி நகர், சத்யாநகர், ஆத்திக்காடு, கரையூர், நடராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், மாங்காடு பகுதிகளில் ரோடு அமைப்பேன். ஓலைக்குடா, கெந்தமாதன பர்வதம் பகுதியில் தொட்டி கட்டி குடிநீர் வழங்குவேன். அனைத்து சுடுகாடுகளுக்கும் சுற்றுச்சுசவர், மின் மயானம் அமைப்பேன். பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவேன். அக்னிதீர்த்த கடலில் கலக்கும் சாக்கடை கழிவுகளை உயரிய தொழில் நுட்பத்துடன் அப்புறப்படுத்துவேன். அக்னிதீர்த்தம் தெற்கு பகுதியிலிருந்து தொலை தொடர்பு அலுவலகம் வழியாக ரயில்வே பீடர் ரோடு வரை கடற்கரை சாலை அமைப்பேன். மத்திய அரசு நிதி மூலம் நகரை அழகு படுத்துவேன். குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதி செய்வேன். வார்டு தோறும் மக்கள் குறை கேட்டறிந்து நிவர்த்தி செய்வேன், என்றார். நகர் செயலாளர் ஜான்பாய், அவைத்தலைவர் சன்முகம், மாவட்ட பிரதிநிதி தங்கத்தேவர், நகர் பொறுப்புக்குழு நிர்வாகி நாசர்கான், இளைஞர் அணி செயலாளர் சங்கர் உடன் சென்றனர்.


