/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர், வே.பாளையம், குளித்தலையில் சுதந்திர தின விழாகரூர், வே.பாளையம், குளித்தலையில் சுதந்திர தின விழா
கரூர், வே.பாளையம், குளித்தலையில் சுதந்திர தின விழா
கரூர், வே.பாளையம், குளித்தலையில் சுதந்திர தின விழா
கரூர், வே.பாளையம், குளித்தலையில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 17, 2011 01:46 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.* வேட்டமங்கலம் ராசமா கல்வி நிறுவனங்களின் சார்பில் சுதந்திர தினவிழா மற்றும் பள்ளி விளையாட்டு விழா நடந்தது. விழாவில் பள்ளி தாளாளர் வடிவேல் தேசிய கொடியேற்றினார். விளையாட்டு ழாவை செயலாளர் ஈஸ்வரி மற்றும் நிர்வாக அலுவலர் கிருபா ஆகியோர் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி துவக்கி வைத்தனர்.பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மெட்ரிக் பள்ளி முதல்வர் ராணி டயானா, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பெரியசாமி, ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் (பொ) தியாகராஜன், கல்வியியல் கல்லூரி துணை சந்திரசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
* கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவில் இளம் அரிமா சங்க ஒருங்கிணைப்பாளர் கோபி கிருஷ்ணா தேசிய கொடியேற்றினார். நகராட்சி கவுன்சிலர் கதிரவன் உள்பட அரிமா சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். * பி.ஏ., வித்யா பவன் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைவர் அம்மையப்பன் தேசிய கெ õடியேற்றினார். துணை தலைவர் கணேசன், தமிழாசிரியர் பிரசன் ன வெங்கடேஷன், ஆலோசகர் சீனிவாசன், தலைமையாசிரியர் பிர காசம் பங்கேற்றனர். * கொங்கு மேல்நிலைப்பள்ளி நடந்த விழாவில் அறக்கட்டளை தலைவர் நாச்சிமுத்து தேசிய கொடியேற்றினார். செயலாளர் மனோகரன்ல பொருளாளர் ஜெயபாலன், தலைமையாசிரியர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர். * சீனிவாச வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவில் முன்னாள் கவுன்சிலர் இளங்குமரன் தேசிய கொடியே ற்றினார். பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன், பள்ளி முதல்வர் ரமணி ஆகியோர் பங்கேற்றனர். * வேலாயுதம்பாளையம் காந்தியார் நடுநிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் பள்ளி தலைமையாசிரியர் சிவகாமி முன்னிலையில், கல்விக்குழு தலைவர் செந்தில்குமார் தேசிய கொடியை ஏற்றினார். புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாச்சிமுத்து தேசிய கொடியேற்றினார். பள்ளி தலைமையாசிரியர் வெங்கடாசலம் உள்பட பலர் பங்கேற்றனர். * வேலாயுதம்பாளையம் அரசு பி.எட்., கல்லூரியில் நடந்த சுதந்திர தின விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் நடேசன், தாளாளர் கோதை, முதல்வர் மேரிகரோலின், கல்லூரி அறக்கட்டளை செயலாளர் கண்ணன், வக்கீல் ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். * புன்னம் சத்திரம் அன்னை மகளிர் கல்லூரியில் நடந்த சுதந்திர தின விழாவில் கல்லூரி தலைவர் மலையப்பசாமி தேசிய கொடியேற்றினார். கல்லூரி முதல்வர் நடராஜ், நர்சிங் கல்லூரி முதல்வர் ஏஜலினா உள்பட பலர் பங்கேற்றனர். * குளித்தலை அருகே தேசியமங்கலம் வி.கே.எஸ்., பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த விழாவில் கல்லூரி தலைவர் சுப்புரெத்தினம் தேசிய கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். * இரணியமங்கலம் மேட்டுப்பட்டி சீதா ராஜாராம் பாலிடெக்னிக் கல்லூரியில் சுதந்திர தினவிழாவில் கல்லூரியின் தாளாளர் ராஜாராம் தேசிய கொ டியேற்றி இனிப்பு வழங்கினார். * குளித்தலை அருகே அய்யர்மலை மௌண்ட் கிரீஸ் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தினவிழாவில்கல்லூரியின் தாளாளர் மணிவேலன் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். * குளித்தலை கிளை சிறையில் நடந்த சுதந்திர தின விழாவில் சப்கோர்ட் நீதிபதி கருணாநிதி கலந்து கொண்டார். வக்கீல்கள் காமராஜ், ஜாபர்சேட், கிளை சிறை கண்காணிப்பாளர் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்