/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஊராட்சி உதவியாளர்கள் கட்டி புரண்டு சண்டைஊராட்சி உதவியாளர்கள் கட்டி புரண்டு சண்டை
ஊராட்சி உதவியாளர்கள் கட்டி புரண்டு சண்டை
ஊராட்சி உதவியாளர்கள் கட்டி புரண்டு சண்டை
ஊராட்சி உதவியாளர்கள் கட்டி புரண்டு சண்டை
ADDED : ஆக 02, 2011 11:31 PM
சிவகாசி : ஆனையூர் ஊராட்சி உதவியாளராக வேலை செய்பவர் பிரசன்னா(30).
நேற்று மாலை அலுவலக பணியினை முடித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று திரும்பினார். அப்போது ஆனையூர் ஊராட்சி உதவியாளராக வேலை செய்த நாகராஜன் , பிரசன்னாவை வழிமறித்து ஏன் என்னைப்பற்றி ஊராட்சி தலைவரிடம் அவதூறாக கூறினாய் என கேட்டார். நான் எதுவும் கூறவில்லை என பிரசன்னா கூறிய போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் அடித்து கொண்டு நடுரோட்டில் சண்டைபோட்டனர். பிரசன்னாவை, நாகராஜ் கடித்து ரத்த காயப்படுத்தினார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.