/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வனவிலங்குகள் நடமாட்டத்தால் தேர்தல் பணிக்கு செல்வதில் சிக்கல்வனவிலங்குகள் நடமாட்டத்தால் தேர்தல் பணிக்கு செல்வதில் சிக்கல்
வனவிலங்குகள் நடமாட்டத்தால் தேர்தல் பணிக்கு செல்வதில் சிக்கல்
வனவிலங்குகள் நடமாட்டத்தால் தேர்தல் பணிக்கு செல்வதில் சிக்கல்
வனவிலங்குகள் நடமாட்டத்தால் தேர்தல் பணிக்கு செல்வதில் சிக்கல்
ADDED : அக் 06, 2011 09:37 PM
வால்பாறை : வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால் எஸ்டேட் பகுதிகளில் தேர்தல் பணிக்கு அதிகாரிகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்காக வால்பாறையில் மொத்தம் 84 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வால்பாறை டவுன் பகுதியை தவிர மீதமுள்ள ஓட்டுச்சாவடிகள் அனைத்தும் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ளன. பெரும்பாலானவை எஸ்டேட் வனப்பகுதியை ஒட்டியிருப்பதால், இப்பகுதியில் யானை, சிறுத்தை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. எந்த நேரத்திலும் வனவிலங்குகள் ஓட்டுச்சாவடிக்குள் நுழையும் அபாயம் இருப்பதால், எஸ்டேட் பகுதிகளில் பணிபுரிய அதிகாரிகள் அச்சப்படுகின்றனர்.
ஓட்டுப்பதிவு முடிந்த பின்னர் இரவு நேரத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதியிலிருந்து ஓட்டுப்பெட்டிகள் வால்பாறைக்கு எடுத்து வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகளிடம் இருந்து உரிய பாதுகாப்பு வழங்கினால் மட்டுமே இப்பகுதியில் பணிபுரிய முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஓட்டுச்சாவடி அருகே காட்டுயானைகள் வராமல் தடுக்க வனத்துறையினரால் தனிப்படை அமைக்கப்படும். இதன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வனப்பகுதியில் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக இரண்டு லாரிகள் கூடுதலாக வழங்கப்படவுள்ளது. ஓட்ச்சாவடிகளில் பணிபுரியும் அதிகாரிகள் அச்சப்பட தேவையில்லை என்றனர்.


