Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/கவர்ச்சிகரமான திட்டங்களுடன் கடனுதவி நிதி நிறுவன உரிமையாளர் கைது

கவர்ச்சிகரமான திட்டங்களுடன் கடனுதவி நிதி நிறுவன உரிமையாளர் கைது

கவர்ச்சிகரமான திட்டங்களுடன் கடனுதவி நிதி நிறுவன உரிமையாளர் கைது

கவர்ச்சிகரமான திட்டங்களுடன் கடனுதவி நிதி நிறுவன உரிமையாளர் கைது

ADDED : அக் 05, 2011 12:50 AM


Google News

செங்குன்றம் : கவர்ச்சிகரமான திட்டங்களுடன் கடனுதவி அளிப்பதாக, முன்பணம் வசூலித்து, 63 லட்சம் ரூபாய் மோசடி செய்த நிறுவன உரிமையாளர் உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர்.

மேலும், மூவரை தேடி வருகின்றனர். சென்னை, பெரவள்ளூர் அடுத்த, அகரம் சோமய்யா தெருவைச் சேர்ந்தவர் ராஜ் விவேக். இவர், அகரம் அருகே கோபாலபுரம் தெருவைச் சேர்ந்த ஜெகன், ராஜசேகர் ஆகிய நண்பர்களுடன், கடனுதவி நிதி நிறுவனம் நடத்த முடிவு செய்தார். அதற்காக செங்குன்றம் பை-பாஸ் சாலை, புள்ளி லைன் ஊராட்சியிலுள்ள புது நகர் பகுதியில், 'வானவில் டிரஸ்ட்' என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். வாடிக்கையாளர்களை கவர, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார்.



இதனால் செங்குன்றம், வடகரை, பாடியநல்லூர், சோழவரம், பொன்னேரி என, திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் வாடிக்கையாளர்கள் குவிந்தனர். தங்களுக்கு சாதகமான சில விதிமுறைகளுடன், அவர்களை திட்டங்களில் இணைத்து, 'டிபாசிட்' தொகைகளை வசூலித்தனர். இந்நிலையில், திடீரென நிதி நிறுவனம் மூடப்பட்டது. லட்சக்கணக்கில் கடன் கிடைக்கும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கடன் மற்றும் வட்டிக்கு வாங்கி டிபாசிட் செய்தவர்களும், தங்கள் சார்பாக வாடிக்கையாளர்களை இணைத்தும் விட்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட 442 பேர் ஒன்று திரண்டு, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் செய்தனர். அவரது உத்தரவின்படி, செங்குன்றம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட், எஸ்.ஐ.,க்கள் சிதம்பரம், ஜெயக்குமார், தலைமைக் காவலர் சந்திரசேகர் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.



அவர்கள் நடத்திய விசாரணையில், 63 லட்ச ரூபாய் மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. வழக்கில் தொடர்புடைய, ராஜ் விவேக்கின் மனைவி விசாலாட்சி, 35, ஜெகனின் அம்மா சரஸ்வதி, 58, ஆகியோர் கடந்த மாதம் 24ம் தேதி கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த ராஜ்விவேக், 39, நேற்று முன்தினம் மாலை, சென்னை திரு.வி.க., நகர் பஸ் நிலையம் அருகே கைது செய்யப்பட்டார். அவர் மூலம் முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் இந்த மோசடி வழக்கு தொடர்பாக, தலைமறைவாக உள்ள ஜெகன், ராஜசேகர், அவரது மனைவி சுதா ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us