/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து ஆர்.டி.ஓ., முற்றுகைகுடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து ஆர்.டி.ஓ., முற்றுகை
குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து ஆர்.டி.ஓ., முற்றுகை
குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து ஆர்.டி.ஓ., முற்றுகை
குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து ஆர்.டி.ஓ., முற்றுகை
ADDED : அக் 12, 2011 02:33 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம்
செய்யப்படாததை கண்டித்து பொதுமக்கள் ஆர்.டி.ஓ.,வை முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 10வது பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கடந்த
10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து
பொதுமக்கள் கவுன்சிலர் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி
பெண்கள் நேற்று காலை 10 மணியளவில் துறைமங்கலம் டி.இ.எல்.சி.,
நடுநிலைப்பள்ளி எதிரே பெரம்பலூர்-திருச்சி சாலையில் காலிக்குடங்களுடன்
பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆர்.டி.ஓ., ரேவதி சம்பவ
இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை
நடத்தினார். அப்போது பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம்
செய்யப்படாததை கண்டித்து பொதுமக்கள் ஆர்.டி.ஓ., ரேவதியை முற்றுகையிட்டனர்.
இதைத்தொடர்ந்து பெரம்பலூர் கமிஷனர் சுரேந்திரஷா சம்பவ இடத்திற்கு
வரவழைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக
ஆர்.டி.ஓ., ரேவதி உறுதியளித்ததின் பேரில் பெண்கள் கலைந்து சென்றனர். இந்த
மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தால் பெரம்பலூர்-திருச்சி சாலையில் அரை
மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ல் இரண்டு பேர் சாவு


