Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மரங்கள் கடத்தல்? விசாரணை தீவிரம்

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மரங்கள் கடத்தல்? விசாரணை தீவிரம்

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மரங்கள் கடத்தல்? விசாரணை தீவிரம்

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மரங்கள் கடத்தல்? விசாரணை தீவிரம்

ADDED : ஜூலை 13, 2011 11:53 PM


Google News
தர்மபுரி: தர்மபுரி வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்கள் இரவோடு, இரவாக வெட்டி கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தர்மபுரி வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சாலையோரங்களில் அதிக அளவில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இலக்கியம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இந்த பகுதியில் உள்ள மரங்கள் அடிக்கடி வெட்டி கடத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் அந்த பகுதியில் இருந்த பெரிய மரத்தை சிலர் வெட்டினர். நேற்று காலையில் வெட்டப்பட்ட மரத்தின் 60 சதவீத மரக்கட்டைகளை வண்டியில் எடுத்து சென்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் வருவாய் துறை அலுவலர்களுக்கு புகார் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஆர்.ஐ., கார்த்திகேயன், வி.ஏ.ஓ., ராமசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மரத்தை வெட்டியவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அடிக்கடி இது போன்று மரம் வெட்டப்பட்டது குறித்தும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர். இதனால், வெண்ணாம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us