Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தேர்தல் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்காணிக்க கமிஷன் உத்தரவு

தேர்தல் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்காணிக்க கமிஷன் உத்தரவு

தேர்தல் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்காணிக்க கமிஷன் உத்தரவு

தேர்தல் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்காணிக்க கமிஷன் உத்தரவு

ADDED : செப் 28, 2011 11:38 PM


Google News

சிவகங்கை : கடந்த தேர்தலின் போது ஓட்டுச்சாவடி, பிரச்னைக்குரிய கிராமங்களில் கலவரத்தில் ஈடுபட்ட கட்சியினரை கண்காணிக்குமாறு, போலீசாருக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுச்சாவடி, பிரச்னைக்குரிய கிராமங்களில் பிரச்னை ஏற்படாமல் இருக்க, முந்தைய தேர்தல் காலங்களில் கலவரத்தில் ஈடுபட்ட கட்சியினர், பிற அரசியல் சார்ந்த ரவுடிகள் குறித்த விபரங்களை சேகரித்து வைக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலின் போது, பிற அரசியல் கட்சியினருக்கு ஆதரவாக ஓட்டுச்சாவடிகளில் இவர்கள் மீண்டும் கலவரம், பிரச்னைகளில் ஈடுபடாமல் இருக்க, அவர்கள் பற்றிய விபரங்கள், அரசியல் சார்ந்த வழக்குகள் அதன் நிலை போன்ற விபரங்களை சேகரித்து தேர்தல் கமிஷனுக்கு அனுப்பவேண்டும்.கண்காணிப்பு: இதுபோன்று அரசியல் பின்னணியில் உள்ள ரவுடிகள், கட்சியினரை உள்ளாட்சி தேர்தலின் போது கண்காணிக்க வேண்டும் எனவும் மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us