ADDED : ஜூலை 28, 2011 10:09 PM
ஊட்டி : நீலகிரி மாவட்ட புதிய எஸ்.பி.,யாக நிஜாமுதீன் (56)
பொறுப்பேற்றார்.நீலகிரி மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த காளிராஜ் மகேஷ்குமார்
தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி.,யாக பணிமாறுதல் செய்யப்பட்டார்.
கோவை 'டிசி'யாக
பணிபுரிந்து வந்த நிஜாமுதீன், நீலகிரி மாவட்ட எஸ்.பி.,யாக நேற்று
பொறுப்பேற்றார். பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த இவர், நீலகிரி மாவட்டத்தில்
இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி.,யாக ஏற்கனவே பணிபுரிந்துள்ளார்.
பொறுப்பேற்ற பின்பு எஸ்.பி., நிஜாமுதீன் நிருபர்களிடம் கூறுகையில்,''இதற்கு
முன்பு இருந்த எஸ்.பி., மேற்கொண்ட மக்களுக்கான திட்டங்கள் தொடரும்.
சுற்றுலா நகரின் வாகன நெரிசலை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.
'பிரன்ஸ் ஆப் போலீஸ்' திட்டம் விரைவு படுத்தப்பட்டும்,'' என்றார்.


