Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/வரி இல்லாத மாநகராட்சியாக மாற்றுவேன்

வரி இல்லாத மாநகராட்சியாக மாற்றுவேன்

வரி இல்லாத மாநகராட்சியாக மாற்றுவேன்

வரி இல்லாத மாநகராட்சியாக மாற்றுவேன்

ADDED : அக் 07, 2011 01:43 AM


Google News
சேலம்: ''என்னை தேர்வு செய்தால், வரி இல்லாத மாநகராட்சியாக உருவாக்கப்படும்,'' என, தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, சேலம் மேயர் பதவி காங்., வேட்பாளர் விஜயவர்மன் பேசினார்.சேலம் ஐந்து ரோடு அருகே காங்கிரஸ் கட்சியின் தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. மாநகர் மாவட்ட காங்., பொருளாளர் ரவிவர்மா குத்துவிளக்கேற்றினார். சேலம் காங்., மேயர் வேட்பாளர் விஜயவர்மன், தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். மாநகர தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயப்பிரகாஷ், மாநகர துணைத் தலைவர்கள் பாஸ்கர், ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகர பொதுச்செயலாளர் கோபி குமரன் பேசியதாவது:உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதை சவாலாக ஏற்றுள்ளோம். பூத் கமிட்டியினர், தெரு கமிட்டியினர், வாக்காளர்களை தினமும் சந்தித்தாலே போதும், ஓட்டுக்களை பெற்றுவிடலாம். தேர்தல் விதிமுறைகளை கடைபிடித்து, ஓட்டு சேகரிக்க வேண்டும்.

இவ்வாறு பேசினார்.மாநகர பொதுச்செயலாளர் பச்சப்பட்டி பழனி, முன்னாள் இளைஞர் காங்., தலைவர் சுரேஷ், கிழக்கு மாவட்ட பொருளாளர் வைத்தியலிங்கம், வீரபாண்டி வட்டார தலைவர் துரைசாமி, இளைஞர் காங்., வடக்கு பொதுச்செயலாளர் ராஜகோபால், தெற்கு பிரதிநிதி ஸ்ரீரங்கன் உள்பட பலர் பேசினர்.

தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, காங்., மேயர் வேட்பாளர் விஜயவர்மன் பேசியதாவது:காங்., தேர்தல் வாக்குறுதிகளையே, தி.மு.க.,, பா.ம.க.,வினரும் பொதுமக்களிடம் கூறியுள்ளனர். எங்களுக்காக, நீங்கள் வாக்கு சேகரிக்க வேண்டாம். நாங்களே பார்த்துக் கொள்கிறோம். ஒருவேளை இரண்டாம் இடம் வந்துவிட்டாலே, தனித்து நிற்கும் நமக்கு வெற்றிதானே என, சிலர் பேசியுள்ளனர்.இரண்டாமிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை; முதலிடத்தில் காங்கிரஸ் வர வேண்டும். சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட, 60 வார்டுகளிலும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறவேண்டும் என்ற கொள்கையுடன் செயல்பட வேண்டும். திராவிட கட்சிகளிடம் இருந்து விலகி நிற்பது பெருமையாக இருக்கிறது.நம்மிடம் இளைஞர்கள் இருப்பது கூடுதல் பலம். என்னை, மேயராக தேர்ந்தெடுத்தால், வரி இல்லாத மாநகராட்சியாக உருவாக்குவேன் என்பது உறுதி. மாநிலத்திலேயே முதன்மையான மாநகராக சேலம் உருவாக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.இதையடுத்து, இரண்டாவது வார்டு அம்மாபாளையம் பகுதியில் பிரச்சாரத்தை மேயர் வேட்பாளர் விஜயவர்மன் துவக்கினார். வார்டு கவுன்சிலர் வேட்பாளர் ஷாநவாஸ் உடனிருந்தார். மேலும், 19வது வார்டு வேட்பாளர் கீதா தவமணி, 20வது வார்டு வேட்பாளர் அலமேலு சரவணன், 21வது வார்டு வேட்பாளர் காண்டீபன், 22வது வார்டு வேட்பாளர் சாந்தா, 1வது வார்டு வேட்பாளர் மகேந்திரன் ஆகியோருடன் அந்தந்த பகுதிகளுக்கு சென்று காங்கிரஸ் கட்சியினர் ஓட்டு சேகரித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us