Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மண்ணில் கசியும் நீரை குடிக்கும் கொடுமை: கானல் நீரான மேலராங்கியம் குடிநீர் திட்டம்

மண்ணில் கசியும் நீரை குடிக்கும் கொடுமை: கானல் நீரான மேலராங்கியம் குடிநீர் திட்டம்

மண்ணில் கசியும் நீரை குடிக்கும் கொடுமை: கானல் நீரான மேலராங்கியம் குடிநீர் திட்டம்

மண்ணில் கசியும் நீரை குடிக்கும் கொடுமை: கானல் நீரான மேலராங்கியம் குடிநீர் திட்டம்

ADDED : ஜூலை 24, 2011 09:26 PM


Google News

திருப்புவனம் : திருப்புவனம் வைகை ஆற்றிலிருந்து மேலராங்கியம் கூட்டுக்குடிநீர் திட்டம் முடங்கியதால், இன்றளவும் குழாயிலிருந்து கசியும் சுகாதாரமற்ற நீரை குடிக்கும் அவலம் தொடர்கிறது.

திருப்புவனத்திலிருந்து 6 கி.மீ., தூரத்தில் உள்ளது மேலராங்கியம், கீழராங்கியம், கூடத்துப்பட்டி. இந்த கிராமங்களுக்கு குடிநீர் வழங்க மேலராங்கியம் கூட்டுக்குடிநீர் திட்டம் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. பணிகள் முடிவடையும் நிலையில் கடந்த தி.மு.க., ஆட்சியில் 'பாரபட்சமாக' கிடப்பில் போடப்பட்டது. வைகை ஆற்றில் அருப்புக்கோட்டை குடிநீர் திட்ட கிணறு அருகே 'போர்வெல்' அமைத்து செயல்படுத்தாமல் முடக்கினர்.



உப்புத்தன்மையுள்ள குடிப்பதற்கு லாயக்கற்ற தண்ணீரை இன்றளவும் குடித்து வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆங்காங்கே மேல்நிலை தொட்டிகளை கட்டி, கணக்கிற்காக போர்வெல் அமைத்து நிதியை மட்டும் செலவழித்துள்ளனர் தண்ணீர் வந்தபாடில்லை. வேறுவழியின்றி கிராமத்தினர் அருப்புக்கோட்டை செல்லும் குடிநீர் குழாயிலிருந்து கசியும் நீரையே குடிநீராக பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னும் இதே நிலை நீடிப்பதாக கிராமத்தினர் தெரிவித்தனர். 60 கி.மீ., தொலைவில் உள்ள அருப்புக்கோட்டை பகுதிக்கு தண்ணீர் வழங்கப்படும் நிலையில் 6 கி.மீ., தொலைவில் உள்ள மேலராங்கியம் பகுதிக்கு தண்ணீர் ஏன் வழங்க முடியாது என இப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us