/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வியட்நாமில் ஓவிணாம் போட்டி: காரைக்கால் மாணவி சாதனைவியட்நாமில் ஓவிணாம் போட்டி: காரைக்கால் மாணவி சாதனை
வியட்நாமில் ஓவிணாம் போட்டி: காரைக்கால் மாணவி சாதனை
வியட்நாமில் ஓவிணாம் போட்டி: காரைக்கால் மாணவி சாதனை
வியட்நாமில் ஓவிணாம் போட்டி: காரைக்கால் மாணவி சாதனை
ADDED : ஆக 09, 2011 02:53 AM
காரைக்கால் : உலக அளவில் வியட்நாமில் நடந்த ஓவிணாம் சாம்பியன்ஷிப் போட்டியில் காரைக்கால் மாணவி 2 வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.காரைக்காலில் ஓவிணாம் தற்காப்பு கலை பயிற்சி கடந்த 2 ஆண்டுகளாக அளிக்கப்பட்டு வருகிறது.
உலக அளவிலான ஓவிணாம் சாம்பியன்ஷிப் போட்டி வியட்நாமில் கடந்த ஜூலை 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடந்தது. இதில் 120 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.இந்தியா சார்பில் 9 பேர் கலந்து கொண்டனர். அதில் தென்னிந்தியாவில் இருந்து புதுச்சேரி காரைக்காலைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி சரஸ்வதி, இரண்டு பிரிவுகளில் வெண்கல பதக்கம் வென்று சாதித்தார்.
இதுமட்டுமின்றி வாலிபால் விளையாட்டு வீரரான சரஸ்வதி, அரியானாவில் நடந்த அகில இந்திய ஓவிணாம் போட்டியில் இரண்டு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். ஈரான் நாட்டில் நடக்கவுள்ள தென் கிழக்கு ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மாணவி சரஸ்வதி கூறுகையில், ஓவிணாம் கலை பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது. மேலும் தன்னம்பிக்கை, தைரியம் அளிக்கக்கூடியது. பெண்கள் அதிக அளவில் இவற்றை கற்றுக் கொண்டு பல சாதனைகளை புரிய வேண்டும். இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக இதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டுகளாக தான் ஓவிணாம் கலையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. குறுகிய காலத்தில் இச்சாதனை படைத்தது பெருமையாக உள்ளது என்றார்.


