/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மினி லாரி கவிழ்ந்ததில் ஒருவர் பலி: 29 பேர் காயம்மினி லாரி கவிழ்ந்ததில் ஒருவர் பலி: 29 பேர் காயம்
மினி லாரி கவிழ்ந்ததில் ஒருவர் பலி: 29 பேர் காயம்
மினி லாரி கவிழ்ந்ததில் ஒருவர் பலி: 29 பேர் காயம்
மினி லாரி கவிழ்ந்ததில் ஒருவர் பலி: 29 பேர் காயம்
ADDED : ஆக 06, 2011 02:18 AM
திட்டக்குடி : திட்டக்குடி அருகே மினி லாரி கவிழ்ந்ததில் ஒருவர் இறந்தார்.
29 பேர் படுகாயமடைந்தனர்.அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் மேலமெய்க்கால்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி, 38; இவர் தனது உறவினர்கள் 31 பேருடன் மினி லாரியில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வாகையூர் ஐயனார் கோவிலுக்குச் சென்றனர்.மினி லாரியை டி.பழூரைச் சேர்ந்த கார்த்திக் ஓட்டினார்.பூஜை முடிந்து மீண்டும் ஊருக்கு திரும்பும்போது திட்டக்குடி அடுத்த பட்டூர் அருகே ஆடுகள் ரோட்டில் குறுக்கே ஓடியதால் திடீர் பிரேக் போட்டதில் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி கவிழ்ந்தது.தகவலறிந்த டி.எஸ்.பி., வனிதா மற்றும் திட்டக்குடி, ஆவினங்குடி போலீசார் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.இவ்விபத்தில் ராஜாங்கம், 45; வேலுச்சாமி, 35; அமிர்தம், 55; மணிகண்டன், 45; உட்பட 29 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் திட்டக்குடி மற்றும் பெரம்பலூர் அர” மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதில் திட்டக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகேசன், 38; இறந்தார்.விபத்து குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.