Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தாமிரபரணியில் மணல் அள்ளிய 17 மாட்டுவண்டிகள் பறிமுதல்

தாமிரபரணியில் மணல் அள்ளிய 17 மாட்டுவண்டிகள் பறிமுதல்

தாமிரபரணியில் மணல் அள்ளிய 17 மாட்டுவண்டிகள் பறிமுதல்

தாமிரபரணியில் மணல் அள்ளிய 17 மாட்டுவண்டிகள் பறிமுதல்

ADDED : ஜூலை 28, 2011 01:48 AM


Google News

திருநெல்வேலி : நெல்லை தாமிரபரணி ஆற்றின் உறைகிணறுகளை சுற்றி மணல் அள்ளிய 17 மாட்டு வண்டிகளை வருவாய்துறையினர் பறிமுதல் செய்து சுத்தமல்லி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.நெல்லை மாநகர பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் உறை கிணறுகள் கொண்டாநகரம், பழவூர் கிராமங்களில் உள்ள தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ளன.

மாநகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் கடந்த சில தினங்களாக கலங்கி வருவதாக பொதுமக்கள் டிஆர்ஓ., ரமணசரஸ்வதியிடம் புகார் தெரிவித்தனர்.இது குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கொண்டாநகரம் தாமிரபரணி ஆற்றில் உள்ள உறை கிணறுகளை சுற்றி மாட்டு வண்டிக்காரர்கள் மணல் அள்ளுவதால் குடிநீர் கலங்கலாக இருப்பது தெரிய வந்தது.



இதனையடுத்து கலெக்டர் நடராஜன், டிஆர்ஓ., ரமண சரஸ்வதி உத்தரவின் பேரில் நெல்லை ஆர்டிஓ., ராஜகிருபாகரன், தாசில்தார் அபுல்காசீம் அறிவரையின் பேரில் நெல்லை ஆர்ஐ., இசக்கிமுத்து, விஏஓ.,க்கள் ஆறுமுகம், சுப்பிரமணியன், மாரியப்பன், கிராம உதவியாளர்கள் மேலவாசி, சரவணன், மணிவண்ணன், துரைச்சாமி, கணபதி, முருகன், பெருமாள் ஆகியோர் கொண்டாநகரம் தாமிரபரணி ஆற்றில் மணல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது தாமிரபரணி ஆற்றில் உள்ள உறைகிணறுகளை சுற்றி மணல் அள்ளிய 17 மாட்டு வண்டிகளை மணலுடன் பறிமுதல் செய்து சுத்தமல்லி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.இது குறித்து வருவாய் துறையினர் மற்றும் போலீசர் விசாரணை நடத்தி வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us