/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரயில் பயணிகளுக்கு இலவச கண் பரிசோதனைரயில் பயணிகளுக்கு இலவச கண் பரிசோதனை
ரயில் பயணிகளுக்கு இலவச கண் பரிசோதனை
ரயில் பயணிகளுக்கு இலவச கண் பரிசோதனை
ரயில் பயணிகளுக்கு இலவச கண் பரிசோதனை
ADDED : ஜூலை 26, 2011 09:28 PM
கோவை : கோவை, ரயில்வே ஸ்டேஷன் வந்த பயணிகளுக்கு, கண் இலவச பரிசோதனை முகாம் நேற்று நடந்தது.
இன்று, போத்தனூர் ஸ்டேஷனில் நடக்கிறது. சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன், ஜெயமாலா வின்னர்ஸ் அறக்கட்டளை மற்றும் வாசன் ஐ கேர் சார்பில், கோவை ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், கண் இலவச பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. சதர்ன் ரயில்வே மஸ்தூர் சங்க மண்டல செயலாளர் கோவிந்தன் தலைமை வகித்தார். ஸ்டேஷன் மேலாளர் சந்திரசேகர் முகாமை துவக்கி வைத்தார். ரயில்வே ஊழியர்கள், குடும்பத்தினர் மற்றும் பயணிகள் பரிசோதனை செய்து கொண்டனர்.இலவச முகாமில் பங்கு பெற்று, மேல்சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறப்பு அட்டை வழங்கப்படுகிறது. இதன் மூலம் வாசன் ஐ கேர் மருத்துவமனையில் சலுகை கட்டணத்தில் சிகிச்சை பெற முடியும். இலவச முழு பரிசோதனை, தொடர் சிகிச்சைக்கு 25 சதவீதம், கண்ணாடிக்கு 10 சதவீதம், அறுவை சிகிச்சைக்கு 5 சதவீதம் சலுகை கிடைக்கிறது. இந்த அட்டையை முகாம் முடிந்த ஒரு மாதத்திற்குள் பயன்படுத்த வேண்டும். இன்று, போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் இலவச முகாம் நடக்கிறது. நிகழ்ச்சியில், வாசன் ஐ கேர் மருத்துவமனை பொதுமேலாளர் தமிழ்ச்செல்வன், மேலாளர் பிரேம்சந்த், சதர்ன் ரயில்வே மஸ்தூர் சங்க உதவி மண்டல செயலா ளர்கள் சுந்தரவடிவேலு, ஜெயராமன், கிளை செயலாளர் ஜோன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.