/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பலியாகும் வனவிலங்குகள் தேவை சூரிய மின்வேலிபலியாகும் வனவிலங்குகள் தேவை சூரிய மின்வேலி
பலியாகும் வனவிலங்குகள் தேவை சூரிய மின்வேலி
பலியாகும் வனவிலங்குகள் தேவை சூரிய மின்வேலி
பலியாகும் வனவிலங்குகள் தேவை சூரிய மின்வேலி
ADDED : ஆக 03, 2011 11:26 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : மேற்குதொடர்ச்சி மலை பகுதியொட்டிய விளைநிலங்களுக்கு தண்ணீர் தேடி வரும் வன விலங்குகள் கிணறுகளில் விழுந்து பலியாவதால், இதை தடுக்க சூரிய மின் வேலி அமைக்க வனத்துறை முன் வர வேண்டும் மேற்குதொடர்ச்சி மலை பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் அரிய வகை சாம்பல் நிற அணில்கள், மான்,யானை, காட்டெருமை, பன்றிகளும் ஏராளமாக உள்ளன.
வனப்பகுதி யொட்டிய விளைநிலங்களில் வன விலங்குகள் புகுந்து சேதப்படுத்துவதோடு, தண்ணீருக்காக தனியார் நிலங்களில் உள்ள கிணறுகளில் விழுந்து பலியாகும் சம்பவமும் அதிகரித்துவருகிறது. இதை தவிர்க்க வனப்பகுதியை யொட்டிய விளைநிலங்களில் சூரிய மின் வேலி அமைக்க வேண்டும். ஏற்கனவே செண்பகத்தோப்பு, பிள்ளையார்நத்தம் ரெங்கர் தீர்த்தம் பகுதியில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட மின்வேலி செயல் இழந்து உள்ளது. இதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகளுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, கூடுதலாக ஆழ்துளை கிணறு அமைத்து, தண்ணீர் தொட்டி அமைக்க வழி செய்ய வேண்டும்.


